பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரித்தல், மஞ்சள் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்குமா என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
உழவுக்கு வந்தனம் செய்யும் நாளான பொங்கல் பண்டிகை விவசாயிகளின் வாழ்வில் முக்கிய நாளாக கொண்டடாப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளில், முக்கிய இடம்பெறுவது கரும்புகள். பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொருவரின் வீடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது கரும்பு தான். பொங்கல் வைக்கும் போது கரும்பு, மஞ்சள், இஞ்சி, மாவிலை, பழம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கருப்பு கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
குறைந்த நேரத்தில் காயம் ஏதுமின்றி பால் கறக்க, நவீன பால் கறக்கும் இயந்திரம்!
400 ஏக்கரில் கரும்பு சாகுபடி
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட்டினம், நெடுவாக்கோட்டை, நாகை, காரிக்கோட்டை, செருமங்கலம், காஞ்சிக்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400 ஏக்கருக்கு மேல் இந்தாண்டு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன் பருவத்தில் சரியாக மழை இல்லாததாலும், வேலையாட்கள் பற்றாக்குறையாலும் கரும்புகளின் விலை உயர தொடங்கி உள்ளது. ஒரு கரும்பின் விலை ரூ.15 முதல் ரூ.25வரையிலும், 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரையிலும் விற்கப்படும் என தெரிகிறது.
அதிக செலவு எடுத்த கரும்பு சாகுபடி
இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், போதிய அளவு பருவமழை இல்லாததால் தண்ணீர், ஆள்பற்றாக் குறையால் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்வது முதல் அறுவடை கூலி வரை மொத்தமாக ஒரு லட்சம் வரை செலவாகும். ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 25,0000 வரை கரும்பு விளையும். அதனால் இந்தாண்டாவது கரும்புக்கு உரிய விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
பொங்கல் பரிசு ரூ.2500 : அரசாணை வெளியீடு!! திட்டம் இன்று தொடக்கம்!!
அரசு மானியம் வழங்கினால் நல்லது
மற்றொரு விவசாயி கூறியதாவது, பொங்கல் பண்டிகைக்கான கருப்பு கரும்பு விளைய 10 மாதங்களாகும். கருப்பு கரும்பு வேரோடு பறிக்கப் படுவதால் இந்த கரும்பை அறுவடை செய்து விட்டு மற்ற ஆலைகரும்பு போல் மறுதாம்பு விடமுடியாது. ஒரே மகசூல் மட்டுமே கிடைக்கும். இந்த கரும்பானது அதிக இனிப்புத்தன்மை வாய்ந்தது. ஆனால், வெல்லம் காய்ச்சுவதற்கு ஏற்றது அல்ல. இயற்கையாக பெய்யும் மழையும், கிணறு களில் உள்ள நீர் மட்டமும் குறையாமல் இருந்தால் தான் கரும்பு விவசாயம் லாபத்தை ஈட்டமுடியும். அதிகமான வேலைகள் இந்த கரும்பில் தான் உண்டு. இதற்கெல்லாம் அரசு விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கினால் இந்த கரும்பை விவசாயிகள் விரும்பி பயிரிடுவார்கள் என்றார்.
தமிழகத்தில் வறண்ட வானிலையுடன் சாரல் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம தகவல்!