1. கால்நடை

குறைந்த நேரத்தில் காயம் ஏதுமின்றி பால் கறக்க, நவீன பால் கறக்கும் இயந்திரம்!

KJ Staff
KJ Staff
Milking Machine

Credit : TNAU

நவீன பால் கறக்கும் இயந்திரத்தின் (Milking Machine) மூலம் விரைவாகவும் திறமையாகவும் பால் கறக்கலாம். முறையாகப் பொருத்தி, சரியாகப் பயன்படுத்தினால் மடியில் காயம் ஏதுமின்றி குறைந்த நேரத்தில் அதிக பால் கறக்கலாம். பால் கறக்கும் இயந்திரம் இரண்டு முக்கிய செயல்களைச் செய்கிறது. இது பகுதி வெற்றிடத்தைப் பயன்படுத்தி, சிறிய கோடு போன்ற கால்வாய் வழியே, காம்பிலிருந்து பாலை சுரக்கச் செய்து, சேகரிக்கும் பாத்திரத்தில் சேர்த்துவிடுகிறது. மேலும் இது காம்புகளை மசாஜ் (Massage) செய்வதால் பால் மற்றும் இரத்தம் ஒரிடத்தில் குவியாமல் சீராகப் பரவியிருக்கச் செய்கிறது.

 

பயன்கள்:

இயந்திரத்தை எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். விலை குறைவு (Low price), நேர விரயம் குறைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வியந்திரம் நிமிடத்திற்கு 1.5 லிருந்து 2 லிட்டர் வரை பால் கறக்கிறது. மேலும் இது சுகாதாரமான (Hygienic) முறையாகும். அதிக அளவில் மின்சாரத்தைப் (Electricity) பயன்படுத்துவதில்லை. கையாள்வது எளிது மடியில் உள்ள பால் முழுவதையும் கறக்கக்கூடியது. அதோடு இவ்வியந்திரத்தில் கறக்கும்போது கன்று ஊட்டுவதைப் போலவே இருப்பதோடு வலியும் ஏற்படுத்துவதில்லை. பால் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.

கருவியின் அளவீடு:

  • மாடுகளுக்கான காம்பில் கருவியின் அளவீடு 352 மி.மீ. மெர்குரி
  • எருமைகளுக்கு 400 மி.மீ. மெர்குரி

எருமையில் பால் கறக்கும் இயந்திரம்:

மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் காம்புகள் சற்று வித்தியாசமானவை. எனவே எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவை. இதன் எடை அதிகம். இந்தியாவில் இதன் தொகுப்பு எடையைக் குறைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொகுப்பு எடை மட்டுமல்லாமல் ஒவ்வொரு காம்பிலும் செயல்படும். எடை (weight) மற்றும் அழுத்த அளவு (Pressure) ஒரே அளவாக இருக்கவேண்டும். அப்போது தான் கறக்கும் பாலின் அளவு சீராக இருக்கும். எனவே காம்புகளில் பொருத்தும் போது எல்லாவற்றிலும் எடை மற்றும் பிடிப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.

பால் கறக்கும் இயந்திரத்தின் பயன்பாடு:

இந்த இயந்திரமானது அதிக அளவு கால்நடைகள் (Livestock) வளர்க்கப்படும் பண்ணைகளில், பால் கறத்தலை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது. இதுஅதிக அளவில் பயன்படுத்தப்படாவிடிலும் சரியான கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாண்டால் இதலிருந்து முழுமையான பயனை அடையலாம்.
பால் கறப்பவர்க்கு அந்த இயந்திரம் பற்றி அறிந்துகொள்ள அதைப் பற்றி அறிந்த (அ) அதைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து பயிற்சி (Training) அளித்தல் அவசியம். பயிற்சி அளிப்பவர் பால் உருவாகும் முறை, இயந்திரத்தைக் கையாளுதல், அதன் அமைப்பு, பராமரிப்பு (Maintanence), பால் கறத்தல் ஆகிய அனைத்தையும் நன்கு தெரிந்தவராக இருத்தல்வேண்டும்.

மிகச் சிறிய அல்லது பெரிய காம்புடைய எருமைகளிலும் கையினால் மட்டுமே கறக்கவேண்டும். சினை மாடுகள் வெப்பமான இயந்திரம் கொண்டு கறப்பதை விரும்புவதில்லை.

ஆதாரம் : www.milkproduction.com

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கிராமத்து தமிழ் ரசிகன்: 1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!

ஆடு வளர்ப்பில் வருவாய் ஈட்ட சிறந்த வழி! முதலீடு செய்ய அழைப்பு!

English Summary: Modern milking machine to milk without injury in less time!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.