டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்து பேச உள்ளார்.
டெல்லியில் ஸ்டாலின் (Stalin in Delhi)
இந்த சந்திப்பை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சி அலுவலகம் (Party Office)
அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் மு.க.ஸ்டாலின், டெல்லியில் கட்டப்பட்டு வரும் தி.மு.க.வின் கட்சி அலுவலகத்தையும் பார்வையிடுகிறார்.
மோடியுடன் சந்திப்பு (Meeting with Modi)
பின்னர் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்திற்குக் கூடுதல் கோவிட் தடுப்பூசி தேவை , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கோவிட் தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி போன்ற கோரிக்கைகளை மோடியிடம் முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் சந்திப்பிற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை ஸ்டாலின் சந்திப்பார்.
இசட் பிளஸ் பாதுகாப்பு (Z Plus Security)
அதன்பின் நாளை வெள்ளிக்கிழமை அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் (Minister and officials)
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லியில் உள்ளார்.டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் அங்கு இருக்கிறார். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் டெல்லி சென்றுள்ளனர்.
முதன்முறை பயணம் (First trip)
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் டெல்லி செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தஞ்சையில் பருத்தி ஏலம் அடுத்த வாரம் தொடக்கம்!
தென்னையில் அதிக மகசூல் பெற, எப்போது எவ்வளவு உரம் இட வேண்டும்?