சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன், நேற்று (18 மே, 2022) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
19-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஏனைய இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் குறிப்பிட்டார்.
அசைவ உணவுப் பிரியர் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது- ஆண்கள்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடதக்கது.
இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸூம் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸூம் என்பது குறிப்பிடதக்கது.
மீனவர்களின் எச்சரிக்கை ஏதுவும் இல்லை.
மேலும் படிக்க:
Amul Recruitment 2022: சூப்பர் வேலைவாய்ப்பு, 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
6 மாதங்களுக்குள் 'Green Card' வழங்க அமெரிக்கா அதிபருக்கு, குழு பரிந்துரை