தரமான காய்கறி விதைகளைத் தயாரிக்கத் தோட்டக்கலைத் துறை புதிய திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது. இதன் மூலம் விதைகள் உற்பத்திக்கு மானியமும் வழங்கப்படவுள்ளது.
தரமான காய்கறி உற்பத்திக்கு புதிய திட்டம்
குறைந்த காலத்தில் அதிக வருவாய் தரும் தொழிலாகக் காய்கறி விவசாயம் இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் (Delta Districts) கூட காய்கறி சாகுபடி நடந்து வருகிறது.
இருப்பினும், தரமற்ற காய்கறி விதைகள் (Vegetable Seeds) பயன்படுத்துவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது, இதனைக் கருத்தில் கொண்டு , நடப்பாண்டு சுமார் 350 டன் தரமான விதைகள் உற்பத்தி செய்யத் தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு 750 கோடி வழங்கியுள்ளது.
காய்கறி உற்பத்திக்கு மானியம்
தோட்டக்கலைத் துறை முன்னெடுத்துள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம், விதைகளை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் மட்டுமின்றி, இளைஞர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றி அவர்களது சொந்த நிலங்களிலும், குத்தகை நிலங்களிலும் காய்கறி விதைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்கென தோட்டக்கலைத் துறை சார்பில் மானியமும் (Horticulture Department Gives subsidy) வழங்கப்படவுள்ளது. இவர்கள் உற்பத்தி செய்யும் தரமான விதைகள், உரிய ஆய்வுக்குப் பின், தோட்டக்கலை வளர்ச்சி முகமை வாயிலாக, கொள்முதல் செய்யப்படும்.
யாரை அணுகவேண்டும்?
இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் இளைஞர்கள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகங்களை அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு