1. தோட்டக்கலை

40% மானியத்தில் காய்கறி விதைகள் தொகுப்பு திட்டம்!- பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Vegetable Seeds With 40% Subsidy
Credit: Vikatan

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தையொட்டி 40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் தோட்டக் கலைத் துறையின் காய்கறி சாகுபடி முனைப்புத் திட்டத்தின் சார்பில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் வெண்டை விதை 3 கிராம், அவரை விதை 2 கிராம், தட்டப்பயறு விதை 2 கிராம், கொத்தவரை விதை 2 கிராம், கத்தரி விதை 2 கிராம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இந்தத் திட்டத்தின்படி சுமார் 10,000 வீடுகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காய்கறி சாகுபடி செய்ய விரும்புவோர் இத்திட்டத்தில் பயன்பெற,  அந்தந்தப் பகுதி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலத்தை அணுகலாம். அவர்களக்கு  40 சதவிகித மானிய விதைத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 

தேவைப்படும் ஆவணங்கள்

ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒப்படைக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 70943 82390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க...

மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!

மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!

English Summary: Vegetable Seeds Package Scheme at 40% Subsidy! - Call for Farmers to Benefit! Published on: 08 August 2020, 05:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.