தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் இன்று மேலும் 4,329 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது
1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு (1,02,721 Affected in TN)
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் (Corona virsu) பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரண்டாவது நாளாக கொரோனா தொற்று அதிகபட்ச அளவாக ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதனால், இந்தியாவில் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் தமிழநாடு உள்ளது.
சென்னையில் 2,082 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,321ல் இருந்து 1,385 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்
வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை பொது சுகாதார பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சிலான ஐசிஎம்ஆர் (ICMR) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோடெக் (Bharat Biotech) உருவாக்கிய தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "பொது சுகாதார அவசரத்தை கருத்தில் கொண்டு" தடுப்பூசி டிரையலை தொடங்குவது விரைவாக்கப்படும் என்று கூறியுள்ளார். மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தது குறிப்படித்தக்கது.
மேலும் படிக்க...
சருமப் பராமரிப்புக்கு கைகொடுக்கும் மாதுளை!
மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!