மீண்டும் தமிழகத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மீண்டும், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சில பகுதிகளில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முன்பே, செய்தியாளர்களிடம் பேசிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். மேலும், அரசு முககவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுப்பியிலிருந்து மட்டுமே விலக்களித்திருப்பதை குறிப்பிட்ட அவர், பொது இடங்களில் முககவசம் கண்டிப்பாக அணிவது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நால்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா அதிகரிப்பைக் கண்டு மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை, என மத்திய அரசு குறிப்பிட்டு இருப்பது சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்றைத் தவிர்க்க பொது இடங்களில் மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு தமிழகத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைக் குறைக்க சமூக இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்தல் அவசியமாகும். தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துக்கொள்ள முன் வர வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை ஐஐடியில் தொற்று உறுதியானவர்களின் நிலைமை சீராக உள்ளதை, அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, பேசிய நால்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வரும் நாளில் தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
மேலும் படிக்க:
முககவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை
தமிழகம்: பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தயார் - பதிவிறக்கம் செய்யலாம்