News

Thursday, 19 November 2020 02:49 PM , by: Daisy Rose Mary

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். கன்னியாகுமரி மாணவி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, உணவு பால்வளம் கோழியின தொழில்நுட்ப உள்ளிட்ட பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள பிவிஎஸ்சி-ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

13,901 விண்ணப்பங்கள் ஏற்பு 

இப்படிப்புகளுக்கு மொத்தம் 15,580 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. பரிசீலனைக்கு பின்னர் பிவிஎஸ்சி-ஏ.ஹெச் படிப்புக்கு 11,246 (தொழில் கல்விக்கு 137 விண்ணப்பம் உட்பட), பி.டெக் படிப்புகளுக்கு 2,518 என மொத்தம் 13,901 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இப்படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதுகால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாணவி முதல் இடம் 

இதில், பிவிஎஸ்சி-ஏஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்ட மாணவி எஸ்.விஷ்ணுமாயா நாயர் (கட்-ஆப்மதிப்பெண் - 199.25), சேலம் மாவட்ட மாணவர் ஜே.சுந்தர் (198.50), கோவை மாவட்ட மாணவி ஜி.கோகிலா (197.51) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தருமபுரி மாவட்ட மாணவி எஸ்.சிவகனி (192), நாமக்கல் மாவட்ட மாணவி வி.பி.ரிதி (192), விழுப்புரம் மாவட்டமாணவி பி.நிவேதா (191.50) முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

 

காலந்தாய்வு எப்போது? 

தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்ததும், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும். விரைவில் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க..

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50% மானியம்: நவ., 23க்குள் விண்ணப்பித்திடுங்கள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)