கொரோனாவிற்கு பிறகான நீண்ட இடைவெளிகளுக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தொடங்கிய வகுப்புகளைப் பார்வையிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுப் பள்ளிக்கு வருகைதந்துள்ளார். இந்த திடீர் வருகையின் நோக்கம் என்ன என்பதைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளுக்கான 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ கற்றல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் நோக்கம் என்பது 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் இருக்க வேண்டும் என்பதாகும். அதோடு, பிழையின்றி எழுதி, படித்தல் செயல்களை செய்யவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் என்பது யாதெனில், 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே ஆகும். இத்தகைய செயல்பாடுகளை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தைச் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
இந்நிலையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, பள்ளியில் உள்ள வகுப்பறையின் பெஞ்சில் மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கற்றல், கற்பித்தல் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
அதன்பின்பு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமாக இருக்கிறதா என்பதையும் சோதனை செய்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு கூடத்தை ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க: TNUSRB SI Admit Card 2022 வெளியாகியது: நேரடி இணைப்பு உள்ளே!
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர், பள்ளியில் உள்ள மாணாவர்கள் பயன்படுத்தும் கழிவறை, கழிவறை தொட்டிகள் ஆகியவைகளையும், குடிநீர் தொட்டிகளையும் அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!