நிதி மற்றும் வரி இழப்புகளைத் தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,685 விவசாய மின் இணைப்பு கொண்ட மின்பாதைகளில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு முதல் கட்டமாக 579 ஃபீடர்கள் (மின் இணைப்பு பாதை) சூரிய சக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் வி.பாலாஜி சட்டசபையில் உறுதியளித்தார். அதை செயல்படுத்துவதற்கு முன் சோதனை நடத்தப்படும் என்று Tangedco மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் உயரழுத்த மற்றும் ஊரக மின்பாதைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக விவசாய மின் இணைப்புகள் கொண்ட ஊரக மின்பாதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் விவசாய மின் இணைப்புகள் மட்டும் கொண்ட மின்பாதைகளை சூரிய ஒளி சக்தி மூலம் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னர் சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார்.
விவசாய மின் இணைப்புகளுக்கான விநியோகச் செலவுக்கும் (cost of supply) (ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.35) உண்மையான மின்கணக்கிற்கும் (actual billing) (ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.46) இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாய மின் இணைப்புகளில் சூரிய சக்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம், இழப்பைக் குறைத்து, ஒரு யூனிட்டுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை சேமிக்கலாம் என Tangedco நம்புகிறது.
மாநில அரசிடம் இருந்து மானியம் பெற்றாலும், விவசாய இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதால், மின்வாரியத்துக்கு தற்போது யூனிட்டுக்கு ரூ.3.89 நஷ்டம் ஏற்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் பேட்டரி சேமிப்பு அமைப்புடன் 20,000 மெகாவாட் சோலார் பேனல்களை நிறுவ Tangedco திட்டமிட்டுள்ளதாக மற்றொரு அதிகாரி கூறினார். சோலார் ஆலைகள் Tangedco உடன் இணைக்கப்படும். மின் இணைப்பின் செயல்பாடுகளில் மின்னழுத்த ஏற்ற இறக்கங்களைக் குறைக்கவும் உதவும்.
முதற்கட்டமாக, திருவாரூர், செங்கல்பட்டு, கரூர், சேலம், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட கிட்டத்தட்ட 4,000 ஏக்கர் அரசு நிலத்தில் 6,000 மெகாவாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் நிறுவப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் , ஒரு தனியார் ஆலோசகரிடமிருந்து விரிவான திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை பெற்று, சோலார் பார்க் திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடுகிறது. அவர்கள் DBOOT (வடிவமைப்பு, உருவாக்கம், சொந்தம், இயக்குதல் மற்றும் பரிமாற்றம்)(DBOOT-design, build, own, operate and Transfer) முறையைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க: