1. வெற்றிக் கதைகள்

பிரதமரே பாராட்டும் அளவிற்கு Millet Women செய்த சாதனை என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM modi prasies the Millet women sharmila oswal

தினை உற்பத்தியினை லாபகரமானதாக மாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஷர்மிளா ஓஸ்வால் பற்றிய விவரங்களை இப்பகுதியில் காணலாம். சமீபத்தில் இவரது செயல்பாடுகளை பிரதமர் மோடி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை ‘தினை ஆண்டுஎன்று அறிவித்துள்ளது. இதற்கு உலகின் 22 நாடுகள் ஆதரவளிக்கின்றன. IIMR (Indian Institute of Millets Research) நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தினை உற்பத்தி மற்றும் அதன் வியாபார உத்திகளை ஊக்குவித்து பயிற்சி அளிக்கிறது.

ஒரு வெற்றிகரமான மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடைய விவசாய-தொழில்முனைவோரான ஷர்மிளா ஓஸ்வால், தினை மற்றும் பாரம்பரிய தானியங்களை உலக முழுமைக்கும் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது NGO, Green Energy Foundation, இந்தியா மில்லட் மிஷன் திட்டத்தை திறம்பட நடத்தி வருகிறது. இந்திய மில்லட் மிஷன் திட்டத்தின் கீழ் அவர் பல்வேறு மாநிலங்களில் 100 நகரங்களில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களிடையே சந்திப்பு கூட்டங்களை நடத்தி உள்ளார்.

இந்த நிகழ்வுகளில், ஷர்மிளா பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களை அழைத்து, தினையின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் மற்றும் தினையின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி பற்றிய தகவல்களை குறித்து விழிப்புணர்வு வழங்கியுள்ளார்.

மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தினை மாநாட்டில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வெற்றிகரமான விவசாய-தொழில்முனைவோராக மாறுவதற்கான பயிற்சிகளை சர்மிளா நம்பிக்கையுடன் கற்பித்து உள்ளார். அவரது வசீகரமான பேச்சால் கவரப்பட்ட பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் தினை உற்பத்தியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

தினை பராமரிப்பு, பேக்கேஜிங், விலை நிர்ணயம், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் B to B, B to C வணிகம் மற்றும் வளரும் தொழில்முனைவோர் ஐஐஎம்ஆர் ஹைதராபாத்தில் இருந்து சிறப்புப் பயிற்சி பெறுவது பற்றிய அனைத்துத்  தகவல்களையும் ஷர்மிளா கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் ஆரோக்கியமான பாரம்பரிய தினையினை நமது அன்றாட வாழ்வின் உணவுப் பழக்கங்களில் ஒன்றாக சேர்க்கப்படுவதை ஊக்குவித்து உறுதி செய்வதே ஷர்மிளாவின் நோக்கமாகும். இதன் மூலம் விவசாயிகள் பெரிய அளவில் பயனடைகிறார்கள் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

கடந்த ஜனவரியில், பிரதமர் மோடி தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நிகழ்ச்சியில், ஷர்மிளாவின் பணியைப் பாராட்டினார். “சர்மிளா ஓஸ்வால் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாயத்தில் பயிற்சி அளித்து வருகிறார், மேலும் அவரது முயற்சிகள் தினை விளைச்சலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரித்ததுஎனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் இன்றைய மிகப் பெரிய சவாலாக இருப்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என ஷர்மிளா நம்புகிறார். மேலும், “இன்று, நூடுல்ஸ், வறுத்த மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது நாகரீகமாக உள்ளது. ஆனால் பொதுவாக இது மக்களின் ஆரோக்கியத்தை சீர்க்குலைப்பதோடு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகிறது. எனவே தான் இப்போது தினையின் பயன்பாட்டை நம் அன்றாட வாழ்வில் அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது என ஷர்மிளா குறிப்பிடுகிறார்.

மேலும் காண்க:

மே மாதத்தில் மட்டும் 12 நாட்கள்.. வங்கி பக்கம் போயிடாதீங்க!

English Summary: PM modi prasies the Millet women sharmila oswal Published on: 30 April 2023, 04:41 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.