மேட்டூர் அணையில் அணைக்கு வருகின்ற நீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்துகொண்டே வருகின்றது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 79.40 அடியிலிருந்து 78.51 அடியாக சரிந்து காணப்படுகிறது. அணைக்கு வருகின்ற நீரின் அளவு வினாடிக்கு 161 கன அடியிலிருந்து வினாடிக்கு 107 கன அடியாக சரிந்து காணப்படுகிறது.
இதுவே கடந்த திங்கள் கிழமையன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 83.35அடியிலிருந்து 82.34அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 174 கன அடியிலிருந்து வினாடிக்கு 104 கனஅடியாக குறைந்து இருந்தது என்பது நினைவுக்கூறத்தக்கது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதோடு, அணையின் நீர் இருப்பு 44.32டி எம் சியாக இருந்தது.
ஆனால் இரு தினங்களில் நீர் இருப்பு வீதம் குறைந்துள்ளது. தற்பொழுது காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
திருச்சியில் ஜுலை 27 முதல் 3 நாள் வேளாண் சங்கமம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
திருச்சியில் ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி|விவசாயிகள் பதிவு செய்யலாம்!