News

Saturday, 13 February 2021 07:39 AM , by: Elavarse Sivakumar

Credit: New Indian Express

விவசாயிகள் பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேர்தல்  பிரசாரம் (Election campaign)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒருபகுதியாக அவர் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
காங்கயத்தில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில், பம்புசெட்டுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

முதல்வர் அறிவிப்பு (Chief Announcement)

இந்தக் கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.

விவசாயிகள் நன்றி (Farmers Thanks)

இந்நிலையில் மும்முனை மின்சாரம் குறித்த முதலமைச்சரின் அறிவிப்புக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தங்களது நன்றியை தெரிவித்துளள்னர்.

இது குறித்து விவசாயி செந்தில்  கூறுகையில், 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இரண்டு போகம் விவசாயம் செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் தற்போது மூன்று போகமும் விவசாயம் செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்கிய முதலமைச்சருக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றிய தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

விவசாயி ஐயப்பன் கூறுகையில்,12 மணிநேரம் மட்டுமே மின்சார்ம் வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

மேலும் படிக்க...

மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)