கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்(TNAU) 41-வது பட்டமளிப்பு விழா, டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமிழகம் வருகிறார்.
இவ்விழாவானது, வரும் 17ம் தேதி மாலை 4 மணியளவில் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது.
இதில், வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த உள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நீ.குமார் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவிற்கு தமிழக ஆளுநரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறார். வேளாண்துறை அமைச்சரும் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான கே.பி. அன்பழகன் புதிய அறநல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்க உள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், 1385 மாணவ மாணவிகள் நேரடியாகவும், 57 மாணவ மாணவிகள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெற உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் கிருட்டிணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!