தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) ஆராய்ச்சி இயக்குனர் முனைவா கே.எஸ் சுப்பிரமணியத்திற்கு, தேசிய அளவிளான இந்திய உர உற்பத்தியாளர்கள் குழுமத்தின் பொன் விழா ஆண்ழற்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு லட்சம் பணப் பரிசு மற்றும் தங்கப் பதக்கத்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
இந்த விருது நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட நானோ உரங்களினால் பயிர் உபயோக்கும் திறன் அதிகரித்து உரச் செலவை குறைக்க வழிவகுக்கும் திட்டத்திற்கும் கிடைத்த பரிசாகக் கருதப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் தலைமையில் 2010ம் ஆணடு ஆண்டுகளுக்கு நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற புதியத் துறை தொடங்கப்பட்டது. இதன் மூலம் , நானோ அறிவியல் என்ற புதிய ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபட்டு பல தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு, விவசாயப் பெருமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். நீ.குமாரின் தூண்டுதலினால், நானோ தொழில்நுட்பங்களான பழங்களைக் பாதுகாக்க எக்சானல், நானோ எமல்சன் மற்றும் நானோ ஸ்டிக்கர், நானோ சானிடைசர், இலையின் ஈற்றுத்தன்மையும், தழைச்சத்தையும் அறிவு உதவும் சென்சர்கள் , கொடிய பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் ஆகியவை செயல்முறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!
அங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா?
உடல் சூடு பிரச்னை இவைகளுக்கும் உண்டு-தடுக்கும் வழிகள் !