1. செய்திகள்

உயர் மதிப்பு காடுகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ள TNAU!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
TNAU trying to create high value forests!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயர் மதிப்பு காடுகள் உருவாக்கம் மற்றும் உள்ளூர் மர விதை பந்துகள் விதைத்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • நாட்டின் பசுமை வளத்தை அதிகரிக்க காடுகளை பெருக்கும் இலக்கை அடைவதற்கும் நிறுவனத்தின் பொருளாதார நிலைத் தன்மையை அதிகரிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உயர் மதிப்புள்ள காடுகளை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

  • உயர் மதிப்புள்ள மரங்களான செம்மரம் தேக்கு, சந்தனம் மற்றும் டூன் ஆகிய மரங்களை சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மேட்டுப் பாளையத்தில் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார், தமிழ்நாடு கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வன அகாடமி இயக்குநர் அன்வர் தின் ஆகியோர் வியாழக்கிழமை மரபணு சிறப்பம்சம் வாய்ந்த செம்மரங்களை நட்டனர்.

  • இந்த உயர் மதிப்பு காடுகள் சுமார் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்நிறுவனத்திற்கு ஒரு நிலை யான வருவாயை வழங்கும். இந்தத் திட்டத்தை தேசிய வேளாண் உயர் கல்வி திட்டம் (NAHEP) மூலம் உலக வங்கி வழங்கி உள்ளது.

  • இதனை தொடர்ந்து ஒரு இலட்சம் பூவரசு, சந்தனம், பூச்சக்காய் வேம்பு, புங்கம், வாகை மற்றும் புளியமரம் விதைப்பந்துகள் விதைப்புத்திட்டத்தை வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அன்வர்தின் கூடுதல் தலைமை வனப்பாது காவலர் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

  • இது நமது பூர்வீக மரங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை வளப்படுத்தவும் வட்டாரத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை அதிகரிக்கவும் உதவும்

  • இது வனக்கல்லூரியின் கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடு களை அதிகரிக்க உதவும், இறுதியாக வனக் கல்லூரியில் உள்ள மேட்டுப்பாளையம் வேளாண் காடுகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் உருவாக்கப்பட்ட தேன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர்.

  • வனவிலங்குகளுக்கான புதிய செயலி உட்பட பல்வேறு புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

TNAUவில் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி- 5 நாட்கள் நடைபெறுகிறது!

எந்தெந்த பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்? பட்டியல் இதோ!

English Summary: TNAU trying to create high value forests!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.