தமிழகத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ, இன்னும் 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலிப்பணியிடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது குறிப்பிடதக்கது.
5413 காலிப்பணியிடங்களுக்கான, இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1.83 லட்சம்பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பல கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், ஒருசில கேள்விகள் தவறாக இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த தகவலை மறுத்த TNPSC தேர்வாணையம், இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க: 1 கிலோ மட்காத குப்பைக்கு ரூ.5 பெறலாம்! எப்படி?
அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில், தவறான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: நாட்டுக்கோழி பண்ணை அமைப்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை
விடைக்குறிப்பு மீது தேர்வர்கள், தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது. எனவே, தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை, இணையதள வாயிலாக தெரிக்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: