பருவநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நீடித்த மழையில்லாத காலங்களுக்கு மத்தியில், தேயிலை தோட்டங்களில் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்பு ஆண்டுக்கு 147 மில்லியன் கிலோவாக மதிப்பிடப்பட்டுள்ளது என தேயிலை ஆராய்ச்சி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை ஆராய்ச்சி சங்கம் (TRA-Tea Research Association) வெளியிட்டுள்ள அறிக்கையில், தேயிலை தோட்டங்களில் பூச்சி தாக்குதலால் ஆண்டுக்கு ரூ.2,865 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
"பூச்சி மற்றும் பயிர் தாக்குதல் நோய்கள் ஏற்கனவே இருந்தன, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது மோசமாகிவிட்டது. வட இந்தியாவில், பூச்சி தாக்குதல்கள் ஆரம்பத்தில் மேற்கு வங்காளத்தில் உள்ள தூர்ஸ் மற்றும் அஸ்ஸாமின் தென் கரையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருந்தது, ஆனால் அது தற்போது பரவி வருகிறது. கச்சார், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், டார்ஜிலிங் மற்றும் தெராய் ஆகிய தேயிலை பயிரிடப்பட்டுள்ள பிற பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது" என்று TRA செயலாளர் ஜாய்தீப் புகான் கூறினார்.
வட இந்திய தேயிலை தோட்டங்களில் காணப்படும் முக்கிய பூச்சிகள்- தேயிலை கொசு பூச்சிகள், த்ரிப்ஸ் மற்றும் லூப்பர் கம்பளிப்பூச்சிகள் ஆகும். வடகிழக்கு இந்தியாவில் கரையான் தொற்று அதிகரித்து வருகிறது, இது புதிய பகுதிகளுக்கு பரவுகிறது என்று TRA அதிகாரி கூறினார்.
மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியிலும், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தாவரப் பாதுகாப்புச் செலவு கடந்த இரண்டு தசாப்தங்களில் ஹெக்டேருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மத்திய பூச்சிக்கொல்லி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை தான், இந்திய தேயிலை வாரியம் அதன் தாவர பாதுகாப்பு குறியீடு மற்றும் TRA விவசாய பணிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
"தற்போது, CIBRC (Central Insecticides Board & Registration Committee) மூலம் இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஏழு பூச்சிக்கொல்லிகள் மட்டுமே உள்ளன, இது தேயிலை கொசு பூச்சிகள் மற்றும் தேயிலை லூப்பர்களை திறம்பட கட்டுப்படுத்துவதில்லை" என்று தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
"குறுகிய அளவிலான வரையறுக்கப்பட்ட இரசாயனங்கள் கிடைப்பது பூச்சிகளின் பரவலை எதிர்க்க இயலவில்லை" என புகன் கூறினார். TRA இன் தாவர பாதுகாப்பு விஞ்ஞானிகள் முக்கிய பூச்சிகளுக்கு எதிராக பல புதிய மூலக்கூறுகள் / பூச்சிக்கொல்லிகளை மதிப்பீடு செய்து, உயிர் திறன் மற்றும் எச்ச ஆய்வுகளை CIB&RC- க்கு சமர்ப்பித்துள்ளனர்.
"தேயிலை கொசு பூச்சி மற்றும் பிற பெரிய பூச்சிகளால் ஏற்படும் பெரும் பயிர் இழப்பைக் கருத்தில் கொண்டு, வணிகத் துறையின் கீழ் உள்ள பொது ஆணையமான டிஆர்ஏ, மேலும் சில பூச்சிக்கொல்லிகளுக்கு தற்காலிக அனுமதி வழங்க வேளாண் செயலாளரைக் கேட்டுக் கொண்டுள்ளது" என்று புகான் மேலும் கூறினார்.
pic courtesy: pexels
மேலும் காண்க: