IAS உள்ளிட்ட யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு அலகபாத் பல்கலைக்கழகம் இலவச பயிற்சியை வழங்குகிறது எனத் தலவல் வெளியாகியுள்ளது. எனவே, UPSC-க்குத் தயாரிகிக் கொண்டிருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
UPSC தேர்வு நாட்டின் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் வெற்றிபெற, கட்டாயம் பயிற்சி அவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பெரும்பாலானோர் தனியார் பயிற்சி மையங்களில் தங்கிப் படித்துத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் அத்தகைய கட்டணப் பயிற்சிகளைப் பெறுவது என்பது இயலாத செயலாக இருக்கின்றது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
இத்தகைய சூழ்நிலையில் அலகாபாத் மத்திய பல்கலைக்கழகம் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது எனலாம். அலகாபாத் மத்திய பல்கலைக்கழகம் யுபிஎஸ்சி தேர்விற்குத் தயாராகும் எஸ்சி பிரிவினருக்கான இலவசப் பயிற்சியினை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. UPSC பயிற்சி நிறுவனங்களின் விலையுயர்ந்த கட்டணத்தை செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு இது பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!
அலகாபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சிக்கான மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட இலவசப் பயிற்சி அக்டோபர் 2022 முதல் தொடங்கப்படும். எஸ்சி மாணவர்களுக்கு UPSC-க்கான இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென எஸ்சி பிரிவைச் சேர்ந்த 545 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 100 மாணவர்கள் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 1 ஆண்டு இலவச பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த முட்டையின் விலை!
அலகாபாத் மத்திய பல்கலைக்கழகம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் இருக்கக் கூடிய 31 மத்திய பல்கலைக்கழகங்களும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன. இதன்படி தேர்வு பெறும் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது. இத்தகைய சிறப்பு பயிற்சியில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுகீடும் முறையும் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை: இன்றே அப்ளை பண்ணுங்க!
சிறார்களுக்கான ”சிற்பி” திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!