இந்தியாவில் சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வால்மார்ட் அறக்கட்டளை (Walmart Foundation) மில்லியன் டாலர், அதாவது சுமார் 180 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது.
வால்மார்ட் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான டானஜர், பிரடான் (NGOs) ஆகிய இரண்டும் புதிய மானியங்கள் மூலம் உதவும் என்றும், இதனால் விவசாயிகளுக்கு சந்தை அணுகலை மேம்படுத்த உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
உழவர் உற்பத்தி அமைப்பு (FPOs) மூலம் பெண் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பதில் இந்த இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பிரத்தியேகமாக கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளன.
வால்மார்ட் அறக்கட்டளையின் தலைவர் கேத்லீன் மெக்லாலின் (Kathleen McLaughlin), கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். பெண்கள் விவசாயிகள் வீட்டில் வெவ்வேறு பொறுப்புகளை எதிர்கொள்கின்றனர், அதே நேரத்தில் அவர்களின் வருமானம் குறைந்து வருகிறது.
இரண்டு புதிய மானியங்களுடன், வால்மார்ட் அறக்கட்டளை இந்தியாவில் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் மொத்தம் 15 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
சுமார் 80,000 பெண்கள் விவசாயிகள் உட்பட 1,40,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்காக பணியாற்றியுள்ளது.
மேலும் படிக்க...
செடியில் புழுத்தாக்குதலைக் புரட்டிப்போடும் இஞ்சி-பூண்டு- மிளகாய்க் கரைசல்!
நீங்களும் அஞ்சலக முகவராக வேண்டுமா?- சிறிய முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழில்!