உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு கோதுமை கிடைக்கும் வரை கோதுமைக்கான ஏற்றுமதி தடை தொடரும் என இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் அசோக் கே மீனா தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும், கோதுமை கொள்முதல் துவங்கியுள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் இதுவரை 10,727 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை நடைப்பெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) தலைவரும், நிர்வாக இயக்குநருமான அசோக் கே மீனா தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் கோதுமை மீதான ஏற்றுமதி தடை தொடரும் என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர் கூட்டத்தில் மேற்கொண்டு அவர் பேசிய விவரங்கள் பின்வருமாறு-
” பருவமழை காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு, மழைக்குப் பிறகும், மொத்த கோதுமை உற்பத்தி 112 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோதுமையினை அரசு கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது என்றும் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) சுமார் 10,727 டன்கள் வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சாமானியர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது, அதனடிப்படையில் தற்போது கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படாது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து அதற்கு மேல் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டால் மீண்டும் ஏற்றுமதி தொடர்பான முடிவை அரசு எடுக்கும்.”
வானிலை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு விவசாயத்துறை அமைச்சகம் கோதுமை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளதாகக் கூறினார். மழை தானியங்களின் தரத்தை பாதிக்கும் என்பது கவலைக்குரிய விஷயம். மழையின் துணை காரணி வெப்பநிலை குறைகிறது. இதனால், கோதுமையின் மதிப்பிடப்பட்ட அளவு உற்பத்தி அடைய வாய்ப்பு உள்ளது." என்றார்.
வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது மதிப்பீட்டின்படி, 2023-24 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) கோதுமை உற்பத்தி 112.18 மில்லியன் டன்னாக இருக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளது. அரசாங்க கொள்முதல் மற்றும் பொது நுகர்வு ஆகிய இரண்டிற்கும், இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட அளவினை விட அதிக கோதுமை உற்பத்தியானால் இந்திய சந்தையில் கோதுமை விநியோகத்திற்கு பற்றாக்குறை ஏற்படாது. விலையும் கட்டுக்குள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல், உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, அதிகரித்து வரும் உள்நாட்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோதுமை ஏற்றுமதியை ஒன்றிய அரசு உடனடியாக தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா? அமைச்சர் பதில்
இன்னும் 2 நாள் தான்- அக்னிவீர் பணிக்கு ஆட்சேர்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?