
Farmers expect cotton prices to rise!
விவசாயத்தில் பருத்தி அறுவடை ஒரு முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்நிலையில் பருத்தி விவசாயிகள் அறுவடை சீசன் அதிகரித்து வருவதால் விலை உயரும் என எதிர்பார்க்கின்றனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால், இந்த ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ளதால், வரும் வாரங்களில் விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் நம்புகின்றனர். தற்போது, பருத்தி சராசரியாக கிலோ, 65 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு இதே சீசனில், கிலோ, 103 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
மாவட்டத்தில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பயிராக, இந்த ஆண்டு பருத்தி சுமார் 8,800 ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. பொதுவாகப், பருத்தி இரண்டு பருவங்களில் பயிரிடப்படுகிறது. முதல் சீசன் ஜனவரி-பிப்ரவரியில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும்.
கடந்த ஆண்டு பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால், இந்த ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மொத்த மகசூல் 2 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை சந்தைகளைத் தேர்வு செய்கின்றனர். கடந்த ஆண்டு சீசனில் 1.4 லட்சம் டன் பருத்தி அறுவடை செய்யப்பட்டு, ஒழுங்குமுறை சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியநாதன் கூறுகையில், "கடந்த ஆண்டு, அறுவடை சீசன் ஆரம்ப கட்டத்தில் கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் விலை இருந்தது, ஆனால் சீசன் முடிவில், அது 65 ரூபாய்க்கு சரிந்தது. இப்போது, ஆரம்ப கட்ட விலையே 65 ரூபாயாக உள்ளது. இது அதிகரிக்கும் என்று நம்புகிறோம். வரும் வாரங்களில்,'' என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க
திணை 5 ஆண்டு திட்டம் குறித்து தெரியுமா?
Umagine Chennai 2023 வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
Share your comments