News

Saturday, 19 September 2020 11:51 AM , by: Elavarse Sivakumar

அமெரிக்க பூர்வகுடி மக்களின் ஆன்மிக கலாசாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அந்நாட்டில் மோட்டார் சைக்கிளில் பயணம் (Bike rally) மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இந்தப் பயணத்தை மகாளய அமாவாசை தினத்தன்று டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கினார்.சுமார் 9 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் அவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். ஒரு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் 15-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆய்வாளர்களின் வருகைக்கு முன்பான அமெரிக்காவின் பூர்வ மரபினை பற்றிய ஆய்வு பயணமாக அமைய இருக்கிறது.

அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான ஆன்மிக ரீதியான ஒற்றுமைகள் குறித்து அறிந்து கொள்ளவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க...

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)