1. தோட்டக்கலை

உயருகிறது ரயில் கட்டணம்- பயணிகளுக்கு அதிர்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rising train fares - shock to passengers!

ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக, உபயோகக் கட்டணம் (User feee)என்றப் புதியக் கட்டணத்தை விதிக்க ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதால், கட்டணம் விரையில் உயரப்போகிறது.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறை செய்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த உபயோக கட்டணம் என்ற பெயரில் (User fee)  புதிய கட்டணம் ஒன்றை விதிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் விரைவில் வசூலிக்கப்பட உள்ளது.இதனால் ரெயில் டிக்கெட் கட்டணம் சற்று உயரும் எனத் தெரிகிறது.

Credit : You Tube

இது குறித்து ரெயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியதாவது:-

முக்கிய ரெயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.

ரெயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். இந்த கட்டணம் மிக குறைந்த அளவில் இருக்கும். அதேநேரத்தில் பயணிகளை பாதிக்கிற வகையில் இருக்காது. உலகத் தரமான வசதிகளை ரெயில்வே கொடுப்பதற்கு இது பயன் உள்ளதாக அமையும்.

1000 Train

இந்தியன் ரயில்வே துறையில் 7 ஆயிரம் ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் 10 முதல் 15 சதவீத ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும். 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!

English Summary: Rising train fares - shock to passengers! Published on: 18 September 2020, 02:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.