இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: TNEB: ஆகஸ்டுக்குள் 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
சிறப்பு தீர்மானத்தில், உலகம் பல தொழில்கள் செய்து சுழன்றாலும் ஏர் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புறினும் உழவுத் தொழிலே சிறந்தது என்று கூறியவர் திருவள்ளுவர். அத்தகைய சிறப்பு மிக்க உழவுத்தொழில், அதன் மேன்மைக்கு எனவே எழுந்த புனிதர் நம் மண்ணைக் காத்த ஒருவர்தான் நம்மாழ்வார் ஆவார்.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
வாடிய பயிரைக் கண்டு வாடினார் வள்ளல் பெருமான், வறண்ட மண்ணைப் பார்த்து வருந்தியவர். மரபுசார்ந்த வேளாண்மையின் மகத்துவத்தை மீட்டுத் தர வேண்டிப் பல்வேறு பேரணிகள், பலமுனை கூட்டங்கள், பாத யாத்திரைகள் மூலமாக இயற்கை விவசாயத்திற்கு வித்திட்டவர், நம்மாழ்வார் ஆவார்.
மேலும் படிக்க: 100 நாள் வேலைத் திட்டம்: 150 நாட்களாக மாற்றப்படுமா?
நம்மாழ்வாருக்கு விருது வழங்க வேண்டும் என்று தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் குறிப்பிடத் தகுந்த சிறப்பு தீர்மானமாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!
இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!