1. மற்றவை

100 நாள் வேலைத் திட்டம்: 150 நாட்களாக மாற்றப்படுமா?

Poonguzhali R
Poonguzhali R
100 Day Work Plan: Convert to 150 Days?

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலையினை 150 நாட்களாக உயர்த்தப் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த நிலையில் மதுரையில் இச்செய்தி குறித்த புதிய அப்டேட்- ஐ இப்பதிவு விரிவாக விளக்குகிறது.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும். இதன் மூலம், ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் நிலையை ஏற்படுத்தித் தருகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயதுவந்த நபர்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது எனபது யாவரும் அறிந்த ஒன்றாகும்.

கொரோனா பாதிப்பு வந்த பிறகு நிறையப் பேர் கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து கொண்டு வருகின்றனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் குறைவு, சம்பளத்துக்கேற்ற வேலை இல்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மேலும் சம்பள பாக்கி சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்கக் கோரி ஊழியர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூரில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி சட்டக்கூலி ரூ.381 வழங்கக் கோரி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பாகக் காசி ஒன்றிய செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் A.லாசர் E.ML.A, மாநிலத் தலைவர் ஜோதிபாசு, ஒன்றியத் தலைவர் சொ.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

English Summary: 100 Day Work Plan: Convert to 150 Days? Published on: 08 July 2022, 03:16 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.