Others

Wednesday, 13 July 2022 03:50 PM , by: Poonguzhali R

Free LPG Cylinder for Ration Card Holders!

ரேஷன் கார்டுதாரருக்கு ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என இந்த மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

பணவீக்கம் அதிகரித்து வரும் தற்கால சூழலில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இனி ஒரு வருடத்தில் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு வருகிறது. அரசானது ஏழைகளுக்கு எல்லா வழிகளிலும் உதவ முயற்சி செய்துகொண்டு வருகின்றது.

மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதலில் இலவச ரேஷன், இப்போது இலவச கேஸ் சிலிண்டர்கள் என வரிசையாகச் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்
இந்த சூழ்லில் அந்தியோதயா அட்டை பயனாளியாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு நல்ல செய்தியாகும். அந்த வகையில் இப்போது அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். புஷ்கர் சிங் தாமி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரேஷன் கார்டுதாரருக்கு ஆண்டுதோறும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது என்றும், இதனால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சாமானியர்களுக்குத்தான் பலன் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாரெல்லாம் பலன் பெற முடியும்?

  • அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்கள் கேஸ் இணைப்பு அட்டையுடன் இணைப்பது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.
  • மாவட்ட வாரியாக அந்த்யோதயா நுகர்வோர் பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தியோதயா கார்டுதாரர்களின் ரேஷன் கார்டுதாரர்கள் கேஸ் இணைப்பை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
  • உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் அந்த்யோதயா அட்டைதாரர்கள் பெரிய பலனைப் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க

மக்களே உஷார்! சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!

இனி பருத்திக்குத் தட்டுபாடு இல்லை! புதிய தகவல்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)