
No more Cotton Shortages! New Information!!
சர்வதேச அளவில் பருத்திக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக், கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான விவசாயிகல் பருத்தியினை நடவு செய்திருக்கின்றனர். இந்நிலையில் இனி பருத்திக்குத் தட்டுப்பாடு வராது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் பருத்திக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான விவசாயிகல் பருத்தியினை நடவு செய்திருக்கின்றனர். எனவே, இவ்வாண்டு பருத்தியின் விளைச்சல் இரட்டிப்பாக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
தமிழகத்தில், வழக்கமாக, ஜூன் மாதம் துவங்கி, ஆகஸ்டு மாதம் வரை பருத்தி நாற்று நடவு செய்யப்படும். பருத்தி வளர்ச்சியடைந்து பருவத்துக்கு வந்து அறுவடை செய்யும்போது, குவிண்டால் ஒன்றுக்கு, 6,000 முதல், 7,000 ரூபாய் வரை விலை என நிர்ணயம் செய்யப்படும். சர்வதேச அளவில் பருத்திக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஒரு குவிண்டால் குறைந்தபட்சம், 10 ஆயிரம் முதல் அதிகபட்சம், 14 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. இது, விவசாயிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
இதன் காரணமாக, நடப்பு பருவத்தில் பருத்தி நடவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார்சாமக்குளம், தொண்டாமுத்துார், அவிநாசி, சூலுார், காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பருத்தியை விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு இருக்கின்றர்.
பருத்தி விவசாயம் குறித்து விவசாயி கூறியதாவது;
கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு விளைவித்த பருத்திக்கு இரட்டிப்பு விலை கிடைத்தது. ஏனெனில், சர்வதேச அளவில் பருத்திக்கு ஏற்பட்ட பற்றாக்குறையே காரணம். தற்போது பயிரிட்டுள்ள பருத்தி, இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். ஏராளமான விவசாயிகள் பணப்பயிரான பருத்தியை பயிரிட்டிருப்பதால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என, நம்புவதாக கோவை பகுதி விவசாயி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments