பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 June, 2024 5:23 PM IST
MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா

MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவின் ஒருபகுதியாக குஜராத் மற்றும் ஹரியானா மாநிலத்திலுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து கௌரவித்தது கிரிஷி ஜாக்ரன் குழு. மேலும், இந்த சந்திப்பின் போது நடப்பாண்டு நடைப்பெற உள்ள MFOI 2024 நிகழ்வு குறித்தும், அவற்றில் இடம்பெற்றுள்ள விருதுகளுக்கான பிரிவுகள் குறித்தும், மஹிந்திரா டிராக்டர் பராமரிப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கிரிஷி ஜாக்ரனின் முன்னெடுப்புகளில் ஒன்றான ”MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா” குஜராத் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கடந்த மாத இறுதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் (ஜூன் 06) குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் சோரியாசி தாலுக்காவிலுள்ள கப்லேதா கிராமத்தை சென்றடைந்தது பாரத் யாத்ரா. நெல், கோதுமை, காய்கறி சாகுபடியில் ஈடுபடும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் யாத்ரா வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஹரியானா விவசாயியுடன் கலந்துரையாடல்:

மற்றொரு புறம் ஹரியானா மாநிலம் ராடவுளி,தலாம்வாலா கிராமத்தில் யாத்ரா நிகழ்வில் முற்போக்கு விவசாயிகளுடன் கிரிஷி ஜாக்ரன் நிருபர் கலந்துரையாடினார். அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள், விவசாயத்துறையில் அரசு கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்தும் விவசாயிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேற்குறிப்பிட்ட அனைத்து நிகழ்விலும், STIHL நிறுவனத்தின் சார்பில் அதன் வேளாண் இயந்திரங்களை இயக்கும் விதம் குறித்து விவசாயிகளுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற முற்போக்கு விவசாயிகளுக்கு கிரிஷி ஜாக்ரன் சார்பில் அவர்களது பணிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

MFOI VVIF kisan bharat yatra:

MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான்.

MFOI 2024 நிகழ்வு:

2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more:

5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை- ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தின் சிறப்பம்சம்!

Belgian Malinois- ஆரம்ப விலை 1 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?

English Summary: MFOI VVIF Kisan Bharat Yatra enthralls farmers with agricultural machinery training
Published on: 03 June 2024, 05:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now