EPFO பென்சன் பெறுகின்ற ஓய்வூதியதாரர்களுக்குப் புதிய வசதி வரப்போகின்றது. அது என்ன வசதி? எத்தகையது? எவ்வாறு பெற வேண்டும்? முதலான பல தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) பென்சன் பெறுவோருக்காக மத்திய பென்சன் விநியோக அமைப்பினை (central pension disbursal system) உருக்கி ஏற்படுத்துவதற்கு EPFO நிறுவனம் பரிசீலித்து வருகின்றது. ஜூலை 29, 30 தேதிகளில் EPFO அறங்காவலர் கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: TNEB: ஆகஸ்டுக்குள் 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
இந்தக் கூட்டத்தில், மத்திய பென்சன் விநியோக அமைப்பை உருவாக்குவது குறித்தான முடிவு பரிசீலித்து அனுமதி அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மத்திய பென்சன் விநியோக அமைப்பால் ஓய்வூதியதாரர்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் EPFO பென்சன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களுக்கு EPFO நிறுவனத்தின் 138 மண்டல அலுவலகங்கள் வாயிலாக தனித்தனியாக பென்சன் செலுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க: 100 நாள் வேலைத் திட்டம்: 150 நாட்களாக மாற்றப்படுமா?
இந்த ஓய்வூதியதாரர்களுக்கு வெவ்வேறு நாட்களில் மற்றும் வெவ்வேறு நேரங்களில் பென்சன் வருகின்றது. ஆனால், மத்திய பென்சன் விநியோக அமைப்பு உருவாக்கப்பட்ட பின் அனைவருக்கும் மொத்தமாக ஒரே நாளில் பென்சன் செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
அதாவது, மத்திய பென்சன் விநியோக அமைப்பின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள 73 லட்சம் EPFO பென்சன்தாரர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரே நாளில் மொத்தமாக ஓய்வூதியம் செலுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!
இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!