"Uzhavan app" மூலம் வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவது எப்படி?

Thursday, 27 August 2020 01:37 PM , by: Daisy Rose Mary

மக்கள் தொகைக்கு ஏற்ப வேளாண் விளைச்சலை அதிகரிக்கவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயா்த்தவும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

உழவன் செயலி (Uzhavan App)

கணினி மயமாக்கப்பட்டு வரும் வேளாண்துறையில், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவும், தவகல்களை வெளியிடவும், விவசாயிகளை தொடர்புகொள்ளவும் பிரத்தியேக செயலிகளை (Apps) தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதில், முக்கியமான ஒரு செயலி தான் இந்த ''உழவன் செயலி - "(Uzhavan App)'' .

இதில், விவசாயிகளுக்கான கடன் திட்டங்கள், வேளாண் இயந்திரங்களுக்கான மானியம் பெறுதல் என பல்வேறு திட்டங்களை விசாயிகள் முறைப்படி பதிவு செய்து பலன் பெறலாம். முன்னதாக விவசாயிகள், தங்களின் Mobile-லில் play store அல்லது App Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.

வேளாண் இயந்திரத்திற்கான மானியம் கோருதல்

  • உழவன் செயலி மூலம், தேவையான வேளாண் இயந்திரத்தை தேர்வு செய்ய வேண்டும்

  • பின்னர் அதில் இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்யவேண்டும்.

  • அதன் பின்னர் வகை என்பதின் கீழ் பண்ணை இயந்திரங்கள் (பொறியியல் துறை) என்பதை தேர்வு செய்யுங்கள்

  • அதன் பின்னர் உழவன் செயலியில் அவரது விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

  • பின் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும்.

  • பின்னர் உரிய விவரங்களைப் பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு அடையாள மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்

தேவையான ஆவணங்கள்

  • இதன்பின்னர், விவசாயிகள் மத்திய அரசின் இணைய தளத்தில் தங்கள் நிலம் சம்பந்தமான விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details) தங்கள் குடும்பத்தாரைப் பற்றிய விபரங்கள் அகியவற்றினை அளிக்கவேண்டும்.

  • மேலும் தனது புகைப்படம் (Photo) அடையாள அட்டை (ID Card) இருப்பிடச் சான்று (Resident Address) பாஸ்போர்ட் (passport) குடும்ப அட்டை (Ration card) வாக்காளர் அட்டை, பான் அட்டை (Pan) உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று, வங்கி பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட வங்கி காசோலை, சாதி மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் அகிய அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

  • பின்னர் தனக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை இணையதளத்தின் மூலம் தேர்வு செய்திட வேண்டும் அப்போது அவருக்கு 6 இலக்க இரகசிய குறியீட்டு எண் PIN No அளிக்கப்படும்.

நிபந்தனைகள் (Subsidy Guideliness)

  • இணையதளத்தில் விவசாயி தனக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் முகவரை தேர்வு செய்திட வேண்டும் இவ்வாறு 15 நாட்களுக்குள் உரிய முகவரை தேர்வு செய்யாத பட்சத்தில் அவரின் விண்ணப்பம் தனாகவே நிராகரிக்கப்படும்.

  • மேலும் 1 மாதத்திற்கு அவ்விவசாயியால் திரும்பவும் அதே வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளுக்கு விண்ணப்பிக்க இயலாது.

  • அவ்வாறு தேர்வு செய்த முகவரை நேரில் சந்தித்து ஆவணங்களையும் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட 6 இலங்கு இரகசிய குறீயீட்டு எண்ணையும் அளித்திட வேண்டும்.

  • விவசாயி தேர்வு செய்த முகவரிடம் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளுக்கு முகவரின் விற்பனை விலைக்குண்டான மொத்த தொகையினை வரைவோலையாகவோ, ரொக்கமாகவோ, வங்கி காசோலையாகவோ, வங்கி இணையதளம் மூலமாகவோ அளித்திடவேண்டும்.

  • முகவரின் விற்பனை விலையானது வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவியின் அடிப்படை விலை, போக்குவரத்து கட்டணம், மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அகிய அனைத்தையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு எழும் கேள்விகளும் பதில்களும் - FAQ

  • விவசாயிகள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரின் விற்பனை விலையினை பேச்சு வார்த்தையின் மூலம் பேரம் பேசி குறைத்தின முடியும்.

  • குறைக்கப்பட்ட விற்பனை விலையின் அடிப்படையில், அரசு மானியமானது  இணையதளத்திலேயே கணக்கிடப்படும்.

  • குறைக்கப்பட்ட விற்பனை விலைக்கு உண்டான தொகையினை வங்கி காசோலையாக முகவரிடம் அளிக்கும் பட்சத்தில், விவசாயி தனது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தில் உள்ள உரிய பதிவினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
  • விவசாயி பணமாக முகவரிடம் அளிக்கும் பட்சத்தில், மேற்படி முகவர் விவசாயியிடமிருந்து பணம் பெற்றுக்கொட்டதற்கான உரிய இரசீதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

  • அவ்வாறு மொத்த தொகையினையும் விவசாயி செலுத்திய பின்னர், நிறுவனத்தின் முகவரால் விவசாயிக்கு வேளாண் இயந்திரம் அல்லது கருவி விநியோகிக்கப்படும்.

  • அதன் பின்னர், கருவியின் விவரங்களான என்ஜின் எண், சேஸிஸ் எண், கருவியின் வரிசை எண், கருவியின் மாடல் விபரம் மற்றும் முகவரின் விலைப்பட்டியில் ஆகியவற்றை முகவரால் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • முகவர் விநியோகம் செய்யப்பட்ட வேளாண் இயந்திரம் அல்லது கருவி மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயி ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இதையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • விவசாயி தனது விண்ணப்பத்தினை ரத்து செய்யும் பொழுது, ஒரு முறை உபயோகிக்கக் கூடிய கடவு எண் (OTP Password) அவரது கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். அந்த எண்ணை பதிவு செய்தால் மட்டுமே அவரது விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.

வேளாண் கருவி வாங்கிய பின்னான நடைமுறைகள்

  • விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட வேளாண் இயந்திரம் அல்லது கருவிகளை வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள உதவி செயற்பொறியாளர்/உதவி பொறியாளர்/இளநிலை பொறியாளரால் விவசாயின் நிலத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யப்படும்

  • பின்னர விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் அல்லது கருவி, விவசாயி மற்றும் ஆய்வு செய்ந அலுவலருடன் கூடிய புகைப்படத்தினை மேற்படி இணையதளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் 10 நாட்களுக்குள் பதவிவேற்றம் செய்யப்படும்.

  • வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள சம்பந்தப்பட்ட செயற் பொறியாளரால், விவசாயிக்கு வாங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகள் மறுஆய்வு செய்யப்படும்.

  • பின்னர் விவசாயிடமிருந்து 30 ரூபாய்க்கான பத்திர தாளில் மேற்படி வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகள் 4 வருடங்கள் விற்கமாட்டேன் எனவும், அப்பகுதியில் உள்ள தோவைப்படும் விவசாயிகளுக்கு தனது தேவைக்குப் போக மற்ற நேரங்களில் வாடகைக்கு அளிப்பேன் எனவும் உறுதி மொழிக்கடிதம் வேளாண்மை பொறியியல் துறையின் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் அவர்களால் பெறப்படும்.

மானியம் செயல்படும் விதம் - How Subsidy Process works 

  • விவசாயி மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை வாங்கிய பின்னர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மறுபடியும் மானிய விலையில் வாங்கிட இயலும்

  • மேலும் ஒரு நிதியாட்டில் தனக்கு தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே விவசாயிகள் மானிய விலையில் பெறமுடியும்.

  • வேளாண் இயந்திர மயமாக்கும் துனை இயக்கத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் படி அரசு மானியம் பெற தகுதி உடையவராக இல்லாத பட்சத்தில் அவருக்கு மானியம் வழங்கப்படாது.

    அவ்வாறு தெரிந்தும் மொத்த விலைக்கு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை முகவரிடம் இருந்து வாங்கும் பட்சத்தில் அவருக்கு அரசு மானியம் வழங்காது.

  • மேற்பட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது அய்வு முடிந்த 10 நாட்களுக்கு ECS மூலம் செலுத்தப்படும்.

  • சம்பந்தப்பட்ட விவசாயியிடம் இருந்து அவரின் வங்கி கணக்கில் மானியம் வரவு வைக்கப்பட்ட விபரத்திற்கான ஒப்புதல் கடிதம் பெறப்படும்.

  • ஏற்கனவே 2019-20 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் பதிவி செய்யப்பட்ட மூதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுகொள்ளப்படமாட்டது. எனவே, இவ்வாண்டிற்கான விண்ணப்பங்கள் புதிதாக செய்யப்பட வேண்டும்.

Uzhavan app Methods to apply Subsidy on Uzhavan app Methods to apply Subsidy for farm implements Uzhavan app உழவன் செயலி
English Summary: Methods to apply Subsidy for farm implements in Uzhavan app

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.