Animal Husbandry

Sunday, 11 October 2020 10:17 AM , by: Elavarse Sivakumar

கால்நடை மற்றும் கோழித்தீவனங்ளை பூஞ்சான் நச்சு பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்த வேண்டும் என பொள்ளாச்சி கால்நடை பராமரிப்பு துறை (Animal Husbandry Department) அறிவுறுத்தியுள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், பொள்ளாச்சி  உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, இடைவெளியுடன் தென்மேற்கு பருவமழை நீண்ட நாட்கள் பெய்தது. இதனால், காற்றில் அதிக ஈரப்பதம் நிலவுகிறது.

தற்போது, மழை நின்று விட்டாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இதனால், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் தீவன மூலப்பொருட்களான, சோயா புண்ணாக்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றில் அதிகளவில் ஈரப்பதம் காணப்படுகிறது.

ஈரப்பதம் காரணமாக, பூஞ்சான் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு, கோழித்தீவனம், கால்நடைத் தீவனம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தீவனங்களை பூஞ்சான் நச்சு பரிசோதனை செய்து விற்பனை செய்ய வேண்டும்.

பண்ணையாளர்களும், பரிசோதனை செய்த பின், கால்நடைகளுக்கு தீவனங்களை கொடுக்க வேண்டும், என கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி?

மலிவு விலையில் வேப்பம் புண்ணாக்கு விற்பனை- தேவைப்படுவோர் அணுகலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)