பொதுவாகவே கோடை காலத்தைக் காட்டிலும், மழைக்காலம், அதிக நோய்களை நம் வீட்டிற்கு விருந்தாளிகளாக அழைத்துவந்துவிடுகிறது. இதில் விலங்குகளுக்கும் விதிவிலக்கு இல்லை. அதிலும் செம்மறியாடுகள் பல்வேறு வகையான நோய்களால் தாக்கப்படுகின்றன. இவற்றில் மழைக்காலங்களில் உண்டாகும் புழுப்புண்கள், முக்கியமான நோயாகும்.
புழுப்புண் உருவாதல்
பல்வேறு நிறம் மற்றும் இனத்தைச் சேர்ந்த ஈக்களில் இளம் புழுக்களின் தாக்கத்தினால் புழுப்புண் நோய் உருவாகிறது.மழைக்காலஙகளில் ஆடுகளின் உரோமங்கள் அதிக நேரம் ஈரப் பசையுடன் இருந்தாலோ, ஆடுகளின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலோ, புழுப் புண்களை உருவாக்கக்கூடிய ஈக்களைக் கவரும்.
இந்த ஈக்களின் தாக்கமானது கிடாவாக இருந்தால், ஆசனவாயின் அருகிலும், பெட்டை ஆட்டின் யோனியையும் அதிகமாகத் தாக்கும். இதனை மட்டுமல்லாமல், மூக்கு தாடை மற்றும் காதுகளில்கூட இந்நோய் உண்டாகும்.
நோயின் அறிகுறிகள்
-
பாதிக்கப்பட்ட ஆடுகள் தலையைக் கீழேத் தொங்கவிட்டுடிருப்பதுடன், பாதிக்கப்பட்ட இடத்தைக் கடித்துக்கொண்டும் இருக்கும்.
-
புண்கள் வால் பகுதியில் உருவாகியிருந்தால், வாலை ஆட்டிக்கொண்டும், பின்னங்கால்களை உதைத்துக்கொண்டும் காணப்படும்.
-
இந்தப் புழுப்புண்களில் இளம் புழுக்களின் குடைச்சல் காரணமாக, தீவனம் உண்ணாமல் இருப்பதால் ஆடுகள் மெலிந்து போகும். இந்தப்புழுக்களிலிருந்து துர்நாற்றமுடைய திரவக் கசிவு வழிந்துகொண்டிருக்கும்.
-
புழுப்புண் குறித்த காலத்தில் அழிக்கப்படவில்லை என்றால், பாக்டீரியாக்களால் தாக்கப்பட்டு இரத்தத்தில் நச்சு கலந்து ஆடுகள் இறக்கவும் நேரிடும்.
பொருளாதார இழப்பு
இதன் மூலம் இறைச்சி மற்றும் தோல் உற்பத்தி பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல், உரோமத்தின் மதிப்பும் குறைந்து ஆடு வளர்ப்போருக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
சிகிச்சை முறைகள்
-
பாதிக்கப்பட்ட ஆடுகளுடன் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
-
ஆடு வளர்ப்போர் பாதிக்கப்பட்ட புழுப்புண்களில் தாமாகவே மண்ணெண்ணெய் மற்றும் டிஞ்சர் போன்றவற்றை ஊற்றக்கூடாது.
-
புழுப்புண்கள் உண்டான இடத்தைச் சுற்றியுள்ள உரோமங்களைக் கத்தரிக்க வேண்டும்.
-
புழுப்புண்களில் உள்ள புழுக்களை இடுக்கியால் எடுத்து ஒரு பாலித்தீன் பையில் போட்டு நன்கு சூரிய வெளிச்சத்தில் வைத்தால் இந்தப் புழுக்கள்
-
பூச்சிக் கொல்லி மருந்துகளைப் இறந்துவிடும். இதனால் மேலும் இதிலிருந்து ஈக்கள் உருவாவதனைத் தடுக்கலாம். வேப்ப எண்ணெயைத் தடவ வேண்டும்.
-
கற்பூரத்தை வேப்ப எண்ணெயுடன் கலந்து புண்களில் போடலாம்.
-
டர்ஃபன்டைன் எண்ணெயைப் புழுக்களில் ஊற்றினால் புழுக்கள் வெளியே வந்துவிடும்.
-
புழுக்களை அகற்றிய பின் புண்ணுக்குப் போடும் களிம்பு மருந்தைப் பயன்படுத்தலாம்பயன்படுத்தி ஈக்களைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.
பாதுகாக்கும் வழிகள்
-
பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிலிருந்து பிரித்துச் சிகிச்சை அளிக்கவேண்டும்.
-
இனவிருத்திக்காகப் பயன்படுத்தும் ஆடுகளில், ஆசனவாயின் மேல்பகுதியில் அதிகத் தோல் சுருக்கங்கள் இருக்கக்கூடாது.
-
உரோமத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகளில் புழுப்புண் தாக்கத்திலிருந்து தடுப்பதற்கு, வாலைச் சுற்றியுள்ள மற்றும் பின்னங் கால்களுக்கு இடையே உள்ள அதிக உரோமங்களை நீக்குதல் வேண்டும்.
-
ஆண்டிற்கு ஒரு முறை உரோமத்தைக் கத்தரித்தல் வேண்டும்.
மேலும் படிக்க...
கால்நடை விவசாயத்தை லாபகரமாக மாற்ற சில டிப்ஸ்!!
பசுவிற்கு ஏற்படும் கீட்டோஸிஸ் நோயை தடுக்கும் மருத்துவ மேலாண்மை முறைகள்!