1. கால்நடை

பசுவிற்கு ஏற்படும் கீட்டோஸிஸ் நோயை தடுக்கும் மருத்துவ மேலாண்மை முறைகள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பால் காய்ச்சல் அல்லது பால் வாதம் நோயானது அதிகமாகப் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் தாக்கப்படுகிறது. சாதாரணமாக 5 முதல் 10 வயது உடைய மாடுகளை இந்நோய் அதிகம் தாக்குகிறது. முதல் இரண்டு கறவைகளில் இந்நோய் அதிகம் தாக்குவது இல்லை. ஒரே மாட்டில் அடுத்தடுத்த பிரசவத்தில் கூட இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது.

இந்நோயிலிருந்து குணமாகும் கறவை மாடுகள் கீட்டோசிஸ் மற்றும் மடி நோயால் பாதிக்கப்படுவது உண்டு. கறவை மாடுகளில் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் கறவை மாடுகள் வைத்திருப்போர் பால் காய்ச்சல் நோயைப் பற்றி அறிந்து கொண்டு இந்த நோய் வராமல் தடுக்க வேண்டிய பராமரிப்பு முறைகளையும், நோய் வந்தால் தகுந்த சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

கீட்டோசிஸ் நோய் (Ketosis)

கீட்டோசிஸ் (Ketosis) என்பது குருதி ஊனீர் கீட்டோன் (பீட்டா ஹைட்ராக்ஸிபியூட்ரேட்) செறிவுகளின் அளவுகள் ஆரம்ப பாலூட்டலின் போது 1.4 - 2.5 மில்லி மோல்/லிட்டர் மேல் அதிகரித்து காணப்படும். இது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு நோய் மற்றும் ஆற்றல் சமநிலை இழப்பு காரணமாக இது நிகழ்கிறது.

கீட்டோசிஸ் நோய் காரணாக பசுவிற்கு எற்படும் பாதிப்புகள்

 • பால் உற்பத்தி குறைதல்

 • பாலின் புரதம் மற்றும் லாக்டோஸ் அளவு குறைதல்

 • இனப்பெருக்க திறன் குறைதல்

 • கருத்தரித்தல் வீதம் குறைதல்

 • மடி வீக்க நோய்

 • சிகிசைக்கான செலவுகள் அதிகம்

கீட்டோசிஸ் நோயின் அறிகுறிகள்

 • பால் உற்பத்தி குறைதல்

 • உடல் எடை இழப்பு

 • பசியின்மை

 • தோல் பாதிப்பு

 • சுவாசம் / அல்லது பாலில் இருந்து அசிட்டோன் வாசனை

 • சில நேரங்களில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிப்பு அடையச்செய்கிறது

நோய் கண்டறிதல்

கீட்டோசிஸ்யை அதன் மருத்துவ அறிகுறிகள் மற்றும் ஆய்வக சோதனைகள் மூலம் கண்டு அறியலாம். பொதுவாக குருதி ஊனீர் கீட்டோன் (பீட்டா ஹைட்ராக்ஸிபியூட்ரேட்) செறிவுகளின் அளவுகள் 1.0 மில்லி மோல்/லிட்டர் மோல் குறைவாக இருக்கும். அதுவே கீட்டோன் செறிவுகளின் அளவுகள் 1.4-2.5 மில்லி மோல்/லிட்டர் மேல் அதிகமாக இருந்தால் அதை கீட்டோசிஸ் என்று உறுதிப்படுத்தலாம். கூடுதலாக ரோத்தேராஸ் சோதனையின் மூலம் கீட்டோன் செறிவுகளை சீறுநீரகத்தில் கண்டுஅறியலாம்.

இரத்தச் சர்க்கரைக் குறைவு (ஈ30 மி.கி/100 மிலி), கீட்டோனிமியா (40 மி.கி/100 மிலி பால்) மற்றும் கீடோனூரியா (500-1000 மி.கி கீட்டோன்/100 மிலி சிறுநீர்) ஆகியவைகள் இந்த நோயை கண்டுஅறிதல் பண்புகள் ஆகும்.

மருத்துவ மேலாண்மை முறைகள்

இந்த நோயை குணப்படுத்த இரண்டு மருத்துவ முறைகள் உள்ளன. அவைகள் முறையே குளுக்கோஸ் வழங்கல் மற்றும் ஹார்மோன் சிகிச்சை.

குளுக்கோஸ் மாற்று சிகிச்சை

இந்த நோய் குளுக்கோஸ் உடம்பில் குறைவதால் ஏற்படுகின்றது. ஆகையால் சிகிச்சையின் ஆரம்ப நோக்கம் உடலில் குளுக்கோஸ் பற்றாக்குறையை மீட்டெடுப்பதாகும். எனவே விரைவாக செயல்படும் குளுக்கோஸ் சப்ளிமெண்ட் (டெக்ஸ்ட்ரோஸ்) உடனடியாக தேவைப்படுகிறது. கால்நடை மருத்துவரை அனுகி தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் 500 மில்லிலிட்டர் உடைய டெக்ஸ்ட்ரோஸ் கரைசலை நரம்பு வழியாக கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை குறுகிய காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் மறுபடியும் இந்த பிரச்சினை வராமல் தவிர்க்க வேண்டுமானால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்

பின்தொடர்தல் சிகிச்சை, குளுக்கோஸின் நீண்ட கால விநியோகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சிகிச்சை முறைக்கு புரோப்பிலீன் கிளைகோல் அல்லது கிளிசரின் கலவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கலவைகளை 250-400 கிராம்/ டோஸ் தினமும் வாய் வழியாக கால்நடைகளுக்கு இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஹார்மோன் சிகிச்சை

குளுக்கோகார்டிகோஸ்டீராய்டுகள் குளுக்கோஸை உற்பத்தி செய்ய தசைகளில் உள்ள புரதத்தை உடைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இது இரத்த குளுக்கோஸ் அளவை உடனடியாக நிரப்புகிறது. ஒரு 5-20 மில்லி கிராம்/டோஸ் உடைய டெக்ஸாமெதாசோன் அல்லது ஐசோஃப்ளூப்ரெடோன் அசிடேட் உள்ளிட்ட குளுக்கோகார்ட்டிகாய்டுகளை தசைகளில் செலுத்த வேண்டும்.

பொதுவாக கார்டிகோஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தும் போது, போதுமான அளவு குளுக்கோஸை வழங்குவது முக்கியம். இல்லை என்றால் இந்த கார்டிகோஸ்டீராய்டு தசை புரதத்தின் அதிகப்படியான முறிவை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு இன்சுலின் 150-200 ஐ தசைகளில் செலுத்த வேண்டும். இது கீட்டோசிஸ்யை கட்டுப்படுத்த உதவும். இன்சுலின் கொழுப்பு முறிவு மற்றும் கெட்டோஜெனீசிஸ் இரண்டையும் அடக்குகிறது, ஆனால் இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தடுக்க குளுக்கோஸ் அல்லது குளுக்கோகார்ட்டிகாய்டுடன் இணைந்து கொடுக்கப்பட வேண்டும்.

இந்த நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக கால்நடை மருத்துவரை அனுகி தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளவும்.

முனைவர்.ஆ. கோபாலகிருஷ்ணன்
மருத்துவர்.மு.பாரதிதாசன்
உதவி பேராசிரியர்,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி.

மேலும் படிக்க...

பயிர்களில் பூச்சி தாக்குதலா? ஆர்கானிக் உரங்களை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்!

ஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை!

மத்திய அரசால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் மானியங்களை தெரிந்துகொள்ள எளிய முறை அறிமுகம்!

English Summary: symptoms and treatment for ketosis cow disease

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.