1. கால்நடை

பணம் சம்பாதிக்க நல்லதொரு வழி- பால் வியாபாரத்தில் உச்சம்தொட சில யோசனைகள்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Image credit by:Klk

மனிதன் தன்னைப் போன்று பிற உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த முன்வந்ததன் விளைவாகவே விட்டில் நாய், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வளர்க்க ஆரம்பித்தான். அவற்றில் குறிப்பாக மாடு, விவசாயத்திற்கு உற்ற துணைவனாக இருந்ததால், அவற்றை வளர்ப்பதில் அதிக ஆர்வம் உருவானது.

அதேநேரத்தில், விவசாயம் செய்ய நிலம் இல்லாவதவர்கள் கால்நடை வளர்ப்பையே தங்களது தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதனால்தான் கால் நடை வளர்ப்பு என்பது இன்றும் தமிகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், கால்நடை விவசாயிகள் அதிக லாபத்தை ஈட்ட முடியும். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்

சுத்தம் (Keep clean)

பண்ணை அமைப்பதிலும், பால் கறப்பதிலும், அதனை சேமித்து வைப்பதிலும், தலையாயக் கடமையாக சுத்தத்தைக் கடைப்பிடியுங்கள். மாடுகளுக்கு தரமான தீவனங்களை அளிப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

தரமான பால் (Quality Of Milk)

எக்காரணம் கொண்டும் பாலில் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களைக் கலக்காதீர்கள். கலப்படமில்லாத பால் என்பதே தங்களின் ஐஎஸ்ஐ முத்திரையாக இருப்பின் நிரந்திர வாடிக்கையாளர்கள் தக்கவைப்பது என்பது மிக மிக எளிது. அப்போது நீங்கள் சற்று கூடுதல் விலைக்கும் விற்று லாபம் ஈட்ட முடியும்.

கலப்படம் காரணமாக தனியார் பால் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் பசும்பால் பக்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அவற்றைத் தக்க வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் கிராமங்கள், நகரங்கள், பால்சொசைட்டி என்று எல்லா இடங்களிலும் திறமையாகத் தேடி புதிய வாடிக்கையாளர்களை வசப்படுத்துங்கள்.

Image credit by:Agrifarmideas

மதிப்புக் கூட்டு பொருள் செய்யுங்கள் (Make Value added products)

விற்பனை செய்யப்பட்ட பால் போக எஞ்சியவற்றை தயிராக (Curd) மாற்றியும் வியாபாரம் செய்யலாம். அவ்வாறு தயிர் தயாரிக்க மண்பானைகளைப் பயன்படுத்துவது மிகச்சிறந்தது. ஏனெனில் மண்பானையில் சேமிக்கப்படும் தயிர் சுவை மிகுந்ததாக இருக்கும். இதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும்.

பசும் பால், எருமைப்பால் என்று பிரித்து, தனித்தனியே விற்பனை செய்வதுடன், கூடுதலாக பால் கறக்கும் வேளையில், அவற்றில் இருந்து நெய் (Ghee) தயாரித்தும் விற்பனை செய்யலாம். பசுநெய் மீது மக்களுக்கு எப்போதுமே நம்பிக்கை அதிகம். அவர்களது நம்பிக்கையை நாம் எளிதில் காசாக மாற்றிக்கொள்ள முடியும்.

Related link: 
கால்நடை துறையை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு

கால்நடைகளுக்கான கோடைக்கால பராமரிப்பு முறைகள்!!

சிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு பால்கோவா, கோவா, மில்க் பேடா (Milk Gova, Gova, Milk Peda) உள்ளிட்ட பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளையும் தயாரித்து லாபம் சம்பாதிக்க முடியும். இதனால் இனிப்பான வாடிக்கையாளர்களையும் உங்கள் வசப்படுத்த முடியும்.

அரசு உதவிகளைப் பயன்படுத்துதல் (Utilise Government Schemes)

பால் பண்ணை அமைக்க அரசு பல்வேறு உதவிகளைச் செய்கிறது. அவற்றைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். பால் கறத்தல், மாடுகளைப் பராமரித்தல், பண்ணையை பராமரித்தல் என்று அனைத்து வேலைகளையும் நீங்களும் கற்றுக்கொள்வது, பண்ணைத் தொழிலாளர்கள் வருகை தாரத நேரத்தில் கைகொடுக்கும். அப்போது தொழிலாளர்களைத் தேடித் திரியத் தேவையில்லை. இதனால் ஏற்படும் நஷ்டத்தை லாவகமாகத் தடுக்க முடியும்.

Elavarase Sivakumar
Krishi Jagran

மேலும் படிக்க...

கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்!!

English Summary: Some tips to turn livestock farming profitably

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.