நடக்க முடியாமல் தவித்த காளைக்கு, மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் செயற்கைக் கால் பொருத்தி அதனை நடக்க வைத்துள்ளனர்.
வாழ்வே இருண்டுவிடும் (Life itself gets darker)
மாடாக இருந்தாலும் சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி, நடக்க முடியாவிட்டால், வாழ்வே இருண்டுவிடும்.
மனிதர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், அதில் இருந்து தப்பிக்க, பல வித சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் ஏதேனும் சிலவற்றைச் செய்தோ, செயற்கைக் கால் பொருத்தியோ தங்களது எஞ்சிய வாழ்நாட்களைக் கவுரவமாகக் கழிக்கவே விரும்புவர்.
மருத்துவர்களின் முயற்சி (Attempt of doctors
இருப்பினும், அது விலங்கு என வரும்போது, அதிக அக்கறை செலுத்தமாட்டார்கள். விலங்குகளின் உரிமையாளர்கள் முன்வராவிட்டாலும், கால்நடை மருத்துவர்களுக்கு அந்த கால்நடையை நடக்க வைத்துப்பார்ப்பதில்தான் அலாதி இன்பம் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார்கள், மதுரை கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள்.
ஆட்சியருக்குத் தகவல் (Information to the Collector)
மதுரை ஷெனாய் நகர் பகுதியில் 2 வயதான காளை ஒன்று நடக்க மடியாமல் தவித்திருக்கிறது. இது குறித்து ஷெனாய் நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகருக்குத் தகவல் அளித்தனர்.
இதன் அடிப்படையில் கால்நடைத் துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், காயமடைந்த காளைக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மலூர் மற்றும் மருத்துவர்கள் குழுவினர், காளையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்து வமனைக்கு கொண்டுச் சென்றனர்.
செயற்கைக் கால் (Prosthetic leg)
அங்கு முதன்மை மருத்துவர் வைரசாமி தலைமையில், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் காளைக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. இதுகுறித்து முதன்மை மருத்துவர் வைரசாமி கூறுகையில், நாங்கள் நாய், ஆடுகளுக்கு ஏற்கனவே செயற்கை பொருத்தியிருக்கிறோம். அதேநேரத்தில் ஜெய்ப்ரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், மாடுகளுக்ளு வெற்றிகரமாக செயற்கைக் கால் பொருத்துவதைக் கேள்விப்பட்டு, ஏன் நாமும் முயற்சிக்கக்கூடாது எனத் தோன்றியது.
இதன் அடிப்படையில் காளைக்குச் செயற்கைக் கால் பொருத்தத் திட்டமிட்டோம். மனிதர்களுக்கு செயற்கைக் கால்களைத் தயாரித்து வழங்கும் ராஜாவிடம், இந்தக் காளையின் கால் அளவுகளைக் கொடுத்து அதற்கு ஏற்றாற்போன்று, செயற்கைக் காலைச் செய்து வாங்கினோம். அவர் அளித்தது சிந்தடிக்கில் செய்யப்பட்ட கச்சிதமான செயற்கைக் கால்.
நடக்கும் காளை (The walking bull)
அந்த செயற்கைக் காலை அறுவை சிகிச்சையின் மூலம் காளைக்குப் பொருத்தப்பட்டது. தற்போது இந்த செயற்கைக் கால் உதவியுடன் இந்தக் காளையால் வழக்கம்போல் நடக்க முடிகிறது. இதன் உரிமையாளர் யார் என்பது தெரியாததால், விலங்குகள் நல ஆர்வலர் தீபக் பராமரித்து வருகிறார். செயற்கைக் கால் பொருத்தப்பட்ட காளைக்கு பைரைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
இரண்டு தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி- ராஜஸ்தானில் அதிசயம்!
கால்நடை தொழிலை விரிவாக்கம் செய்ய மானியம்! - விவசாயிகளுக்கு அழைப்பு!