1. கால்நடை

பால் உற்பத்திக்குத் தடையை ஏற்படுத்தும் மாடுகளின் மடிக்காம்பு அழற்சி - வராமல் தடுப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Hip Inflammation In Cows That Obstruct Milk Production

மாடுகளைத் தாக்கும் நோய்களில் மோசமான ஒன்று என்றால், அது மடிக்காம்பில் ஏற்படும் அழற்சிதான். இந்த, மடி அழற்சி என்பது பல்வேறு பட்ட காரணிகளால் ஏற்படுகிறது.

வாழ்வாதாரம் (Livelihood)

இதனால், விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை மட்டுமல்லாமல், தன் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடுகிறது.

நிறம் மாறும் பால் (Milk that changes colour)

ஏனெனில், இந்நோயினால் மாடுகளின் பாலின் நிறம் மற்றும் தன்மை மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாமல், பால் உற்பத்தி திடீரென குறைந்து விடுவதுடன் அதனால் அதிகமான பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

எந்த மாடுகளுக்கு பாதிப்பு (Damage to any cows)

இந்த நோயைப் பொறுத்தவரை, அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகள், குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யும் மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன.

அயல் நாட்டின மற்றும் கலப்பின மாட்டு இனங்கள், உள்நாட்டின மாட்டு இனங்களை விட இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன

நோய்க்கான காரணம் (The cause of the disease)

மாடுகளின் மடிக்காம்பு பாதிக்கப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. பால் கறவை காலத்தில் இருக்கும் மாடுகள் பொதுவாக இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இந்த நோய் தாக்கினால் பால் உற்பத்தி குறைகிறது. சிகிச்சை அளிக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட காம்புகள் முற்றிலும் சேதமடைந்துவிடும் நிலை ஏற்படும்.

நோய் அறிகுறிகள் (Symptoms of the disease)

 • பாதிக்கப்பட்ட மாட்டின் காம்பு சிவந்தும் பின்பு வீங்கியும் காணப்படும்.

 • பால் உற்பத்தி குறைதல்

 • அதிகப்படியான நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட காம்பு சேதமடைந்து விடும் நிலை ஏற்படும்.

நோய்த்தடுப்பு முறைகள் (Immunization methods)

 • அன்றாடம் மாடுகளின் சுற்றுப்புறம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும்.

 • இதற்கெனத் தனிக்கவனம் செலுத்தி பராமரிப்பது, நல்ல பலனைத் தரும்.

 • மாட்டுக்கொட்டகையின் தரையினை, அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.

 • ஒருநாளுக்கு இருமுறை கொட்டகை அல்லது கட்டுத்தரையை சுத்தம் செய்யவேண்டும்.

 • மாட்டின் சாணம் மற்றும் கோமியம் கட்டுத்தரையில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் 

 • கட்டுத்தரையில் சுண்ணாம்பு மற்றும் ப்ளீசிங் பவுடர் தெளிப்பதன் மூலம் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுபடுத்தலாம்.

 • கறவை மாடுகளை தினமும் சுத்தபடுத்துதல் நல்லது (அ) இருநாட்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தலாம்.

 • கறவை மாடுகளின் கால், தொடை, மடி மற்றும் காம்புகளில் சாணம் இருந்தால் பால் கறப்பதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியது கட்டாயம்.

 • சுத்தமானநீர் (அ) வெந்நீர் (அ) Kmno4 பயன்படுத்தலாம்.

 • பால் கறவையாளர் பால் கறப்பதற்கு முன்பு தன் இரு கைகளையும் சுத்தமாக் கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்

கறவை இயந்திரம் (Milking machine)

 • கறவை இயந்திரத்தைப் பயன்படுத்தினால் இயந்திரத்தை சுத்தமாக கழுவிய பின்னரே பால்கறக்க வேண்டும்.

 • KMno4 /சோப்பு பயன்படுத்தலாம்.

 • பால் கறப்பதற்கு முன்னர் மடி/ கம்புகளை சுத்தமான வெந்நீர்/ KMno4 / SAAF KIT பயன்படுத்தி கழுவலாம்.

 • பால் கறந்த பின் காம்புகளை KMno4 / SAAF KIT நனையும் படி செய்ய வேண்டும்.

 • பால் கறந்த பின்னர் ஒரு மணி நேரம் வரை கறவை மாட்டை அமராமல் பார்த்து கொள்வது அவசியம். தீவினம் அளிப்பதன் மூலம் இதை நடைமுறைப் படுத்தலாம்.

 • இத்தனைத் தடுப்பு முறைகளை தினம் பின்பற்றினால் மடி நோயினை 95 % கட்டு படுத்தமுடியும்.

மேலும் படிக்க...

மாடுகளின் குடல் சவ்வு அழற்சி- தீர்க்க என்ன வழி?

தினமும் 12 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்ட எச்.எஃப் கலப்பின மாடு வளர்க்கலாம்.

English Summary: Hip Inflammation In Cows That Obstruct Milk Production - How To Prevent It From Coming? Published on: 06 August 2021, 09:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.