1. கால்நடை

பிறந்த கன்றுகளின் கொம்பை சுட்டுவிடுவது தேவையா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பிறந்த கன்றுக்குட்டிகளைப் பராமரிப்பதில் பல யுக்திகள் இருக்கின்றன. இதில் முக்கியமானது அதன் கொம்பை அடுத்த 15நாட்களுக்குள் சுட்டுவிடுவது.

தாய்மை (Motherhood)

தாய்மை என்பது, மனிதர்களானாலும் சரி, விலங்குகளானாலும் மாபெரும் கவுரவத்திற்குரியது. தன்னலமில்லாதது. அவ்வாறு ஈன்றெடுக்கும் கன்றுகளைப் பராமரிப்பது கால்நடை வளர்ப்பில் மிக மிக முக்கியமானது.
அந்த வகையில் பிறந்தக் கன்றுகளைப் பராமரிக்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உடல் சுத்தம் (Body cleansing)

கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும்.அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும்.
வைக்கோலைக் கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.

மூச்சுத்திணறல் (Shortness of breath)

மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.

தொப்புள் கொடி (Umbilical cord)

பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலைக் கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே டிஞ்சர் அயோடின் தடவி விட வேண்டும்.

சீம்பால்

பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது.
நோய்களைக் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும்.

சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் இம்முனோ கிளாபுலின் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.

பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும். கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம். அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம்.

அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.

கொம்பு (Horn)

கன்று பிறந்து பதினைந்து நாட்களுக்குள் கொம்பை சுட்டுவிடுவது நல்லது. காரணம், முதல் இரண்டு, மூன்று வாரங்களில் கொம்பை சுட்டுவிடும் போது அதற்கு வேதனை தெரியாமல் இருக்கும்.

மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட காலங்களில் செய்யும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்கும். பொதுவாக நிறைய மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளுக்கு இடையே சண்டை வந்து, கொம்பை உடைத்துக் கொள்வதை தவிர்க்கவே கொம்பை சுடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். ஒன்றிண்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் கொம்பை சுடுவது அவசியமில்லை.

கழிச்சல்

அதிக சீம்பால் குடிப்பதால் பிறந்த கன்றுகளில் கழிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தவர்க்க, பிறந்த கன்றுகள், வேண்டும் அளவிற்கு சீம்பால் குடிக்க அனுமதித்தல் அவசியம்.

மேலும், இளங்கன்றுகள் தரையில் உள்ள மண் போன்றவற்றை உண்ண அனுமதித்தல் கூடாது. இது போன்ற காரணங்களால் கன்றுகளுக்குக் கழிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க...

மாடுகளின் குடல் சவ்வு அழற்சி- தீர்க்க என்ன வழி?

தினமும் 12 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்ட எச்.எஃப் கலப்பின மாடு வளர்க்கலாம்.

English Summary: Is it necessary to shoot the horns of newborn calves? Published on: 14 August 2021, 06:45 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.