திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில், கறவை மாடுகள் (Dairy cows) வழங்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பழங்குடியின விவசாயிகள் (Tribe) மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
-
50 பேருக்கு முழு மானியத்துடன் கறவை மாடுகள் (Dairy Cows) வழங்கப்படுகின்றன.
-
தகுதி மூப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கறவை மாடுகள் வழங்கப்படும்.
-
பயனாளிகள், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவராகவும் பழங்குடியினராகவும் இருக்க வேண்டும்.
-
விதவையர் மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
-
கிராம ஊராட்சியில்நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2
-
சாதி சான்றிதழ்
-
வருமானச் சான்று
-
இருப்பிடச் சான்று
-
குடும்ப அட்டை
-
ஆதார் அட்டை
-
வங்கிக் கணக்கு புத்தகம்
-
வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பதற்கான சான்று
-
பால் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகப் பதிவுச்சான்று
ஆகியவற்றின் நகல்களுடன் துறையூர் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகவல்
க.சிவராசு,
திருச்சி மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க...
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!
41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!
தெளிப்பு நீர் பாசனத்திற்கு 100% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!