1. கால்நடை

70 சதவீத மானியத்துடன் பசு மாடுகளுக்குக் காப்பீடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Insurance for cows with 70% subsidy - Welcome to the decision of the Government of Madhya Pradesh!

எதிர்பாராத உயிரிழப்பின்போது, நம் குடும்பத்தினருக்கு துணை நிற்பது நாம் எடுக்கும் காப்பீடு. அதனால்தான் அனைவரும் ஆயுள் காப்பீடு செய்துகொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், இயற்கை சீற்றங்களால், பயிர்கள் சேதமடையும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க ஏதுவாக பயிர்க்காப்பீடு செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்குச் சொந்தமான நாட்டு மாடுகள், செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை (Cattle Insurance) செயல்படுத்த மத்தியப் பிரதேச அரசு பசு தன் பீமா யோஜனா (Pashudhan Bima Yojana)எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

கால்நடைகளின் இறப்பால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை இந்தத் திட்டம் குறைக்கும் என்றும், கால்நடைகளை நம்பி வாழும் விவசாயிகளுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்றும் மத்திய பிரதேச விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எத்தனை கால்நடைகள் ? (How many cattle?)

ஒரு பயனாளி ஐந்து யூனிட் விலங்குகளுக்கு காப்பீடு செய்யலாம். செம்மறி ஆடு, ஆடு, மாடு, எருமை போன்ற வகைகளில் 10 கால்நடை விலங்குகள் சேர்ந்தது ஒரு யூனிட்டாக கருதப்படும். எனவே, கால்நடை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யலாம்.

மானியம்(Subsidy)

  • இந்த திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள கால்நடை உரிமையாளர்களுக்கு, காப்பீட்டு பிரீமியத்தில் 50 % மானியம் கிடைக்கும்.

  • அதே சமயம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின கால்நடை உரிமையாளர்களுக்கு காப்பீட்டு பிரீமியத்தில் 70% மானியம் கிடைக்கும்.

  • காப்பீட்டு பிரீமியத்தின் அதிகபட்ச வீதம் ஒரு வருடத்திற்கு 3% ஆகவும், மூன்று ஆண்டுகளுக்கு 7.5% ஆகவும் இருக்கும்.

  • கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை காப்பீடு செய்யலாம்.

15 நாட்களில் காப்பீட்டுத் தொகை (Sum assured in 15 days)

  • காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறந்தால், 24 மணி நேரத்திற்குள் உரிமையாளர்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

  • கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கையில் மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடுவார்கள்.

  • பின்னர் அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு உரிமையை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • இத்திட்டத்தின்படி  நிறுவனம் அடுத்த 15 நாட்களில் காப்பீட்டுத் தொகையை கால்நடை உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

  • இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பால் கறக்கும் விலங்குகள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளும் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

English Summary: Insurance for cows with 70% subsidy - Welcome to the decision of the Government of Madhya Pradesh!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.