நாட்டுக் கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க, அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திப் பயனடையலாம்.
-
நாட்டுக் கோழி வளர்ப்பில் கிராம மகளிர் நோய் தடுப்புக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை.
ஆனால் நாட்டுக் கோழி வளர்ப்பைப் பொருத்தவரை, முக்கிய எதிரியே வெள்ளைக் கழிச்சல் நோய்தான்.
-
இதனைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் கால்நடை நிலையங்களில் அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
-
தற்போது ஆண்டுக்கு 200 முட்டைகள் இடும் கிரிராஜா, வனராஜா போன்ற கலப்பின நாட்டுக் கோழிகள் அறிமுகமாகி உள்ளன. இவை அடை காக்காது.
-
இவற்றின் முட்டைகளை நாட்டுக் கோழிகள் மூலம் அடைவைத்து குஞ்சுகளைப் பெறலாம்.
-
எனவே இக்கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க 60ம் நாள் முதல் தடுப்பூசியும், பின்பு 6 மாதங்களுக்கு ஒரு தடவையும் தடுப்பூசி போட வேண்டும்.
தகவல்
வி.ராஜேந்திரன்
முன்னாள் கால்நடை இயக்குனர்
மேலும் படிக்க...
கோழித் தீவனங்களை பரிசோதிப்பது மிக மிக அவசியம்!
எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!