பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள அம்மை நோய்யில் இருந்து அவற்றை பாதுகாப்பது குறித்த மருத்துவ முகாம் (Medical Camp)நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப் பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வரும் 31ம் தேதி வரை , கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த 40 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
-
இதர துறைகளுடன் இணைந்து, திசையன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
இம்முகாம்களில், கால்நடைகளில் ஏற்பட்டுள்ள அம்மை நோய் அறிகுறிகளான தோல் புண்கள், கழுத்தில் அல்லது காலில் வீக்கம் காய்ச்சல் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது
-
இந்நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!
அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!