1. கால்நடை

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் : நவ.,30க்குள் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் முதல்கட்டமாக 25 பேருக்கு ஆயிரம் கோழிகள் கொண்ட நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் முதல்கட்டமாக 25 பேருக்கு ஆயிரம் கோழிகள் கொண்ட நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் கோழி வளர்ப்பில் ஆர்வம் மற்றும் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். 2,500 சதுரஅடி கொண்ட கோழிக்கொட்டகை அமைப்பதற்கு ஏதுவாக இடம் வைத்திருக்க வேண்டும். கோழிகள் வளர்ப்பதற்கு தேவைப்படும் தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் குடவை ஆகியவற்றை, தாங்களாகவே கொள்முதல் செய்துகொள்ள வேண்டும்.

கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கை கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப் படும். பயனாளிகளில் 30 சதவீதத்தினர் கட்டாயமாக ஆதி திராவிடர், பழங்குடி யினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் நாட்டுக்கோழி பண்ணையை செயல்படுத்த உறுதி வழங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப் படும் பயனாளிகளுக்கு ஆயிரம் நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்வதற்கும், தீவனம் வாங்குவதற்கும், குஞ்சு பொறிப்பக கருவி வாங்குவதற்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று, வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

Cyclone Nivar: தமிழகத்தை வரும் 25-ம் தேதி தாக்கும் நிவர் புயல்... அதிகனமழை எச்சரிக்கை!!

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி : கனமழை எச்சரிக்கை, உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள் - வேளாண்மை முதன்மைச் செயலர்!!

70 எத்தனால் திட்டங்களுக்கு ரூ. 3,600 கோடி கடன் - மத்திய அரசு!!

English Summary: Under National Agricultural Development Program, 50 percent subsidy will be given to set up a poultry farm with one thousand chickens for 25 people in the first phase in Tenkasi district. Published on: 22 November 2020, 05:14 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.