1. கால்நடை

100% மானியத்தில் செயல்படும் கால்நடை திட்டங்கள் - நீங்களும் பயன்பெறலாம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

100 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும் கால்நடை திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கால்நடை துறை தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை துறை சார்பில் பல்வேறு திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

1. விலையில்லா கறவைப்பசு வழங்கும் திட்டம்.

2. விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்

3. ஊரக புறக்கடை கோழிகள் வழங்கும் திட்டம்

4. தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம்

5. நீர் வள நில வள திட்டம்

6. கிசான் கிரெடி ட் கார்டு திட்டம்

7. சமச்சீர் வளர்ச்சிநிதி திட்டம்

8. கால்நடை பாதுகாப்பு திட்டம்

விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம்

தமிழக அரசின் இந்த திட்டமானது முற்றிலும் 100% மானித்தில் செய்ல்படுத்தப்படுகிறது. குறிப்பாக கிராம புற ஏழை எளிய பெண்கள், விதவைகள், திருநங்கைகள், மற்றும் ஆதரவற்ற, நிலமற்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம்

பால் பண்ணை வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்படுகிறது. இதன் மூலம் வர்த்தக தேவைக்காக அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளையும் ஆரோக்கியமான கன்றுகளையும் பெறமுடியும்.

மாதந்தோறும் லாபம் வழங்கும் கோழிப்பண்ணை! இப்போதே அமைக்க கடன் வழங்கும் வங்கிகள்! வாங்க தொழில் தொடங்கலாம்..!!

நீர் வள நில வள திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் கிராமங்கள் தோறும் கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் செயற்கை கருவூட்டல், தீவன விதைகளை விநியோகித்தல், கால்நடை பராமரிப்பு முறைகள், நோய் தொற்றுக்கான முதலுதவி சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் மூலம் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் கால்நடைகளைக் கலங்கடிக்கும் எலிக்காய்ச்சல் - கட்டுப்படுத்துவது எப்படி?

கிசான் கிரெடிட் கார்டு திட்டம்

விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் அவசர பணத் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமாக இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், பண்ணை அமைப்பதற்கும், ஆடு, மாடு, கோழித் தீவனங்கள் வாங்க வங்கிகள் மூலம் குறைந்த வட்டி வகிதத்தில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

சமச்சீர் வளர்ச்சிநிதி திட்டம்

இந்த சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டத்தின் கீழ். விவசாயிகளுக்கும், ஆடு, மாடு, கோழிப் பண்ணை வைத்துள்ளவர்களுக்கும் 50% மானியத்தில் விதைகள் மற்றும் தீவனப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கால்நடை பாதுகாப்பு திட்டம்

கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 102 கால்நடை நலவாழ்வு முகாம்கள் கிராம உட்புறங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், செயற்கை கருவூடல், கால்நடைகளின் பேறுகால பராமரிப்பு, கருவுறாமைக்கான சிகிச்சை அளித்தல், நோய்வாய்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்தல் நல்ல ஆரோக்கியமான பசு கன்றுகளுக்கு பரிசுகளை விநியோகித்தல் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கால்நடை சார்ந்த திட்டங்களை உங்கள் பகுதி கால்நடை மருந்தகங்களை அணுகி மேற்கூறிய திட்டங்கள் குறித்து கூடுதல் தகவல்களை அறிந்து பயன் பெறலாம்.

ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய்! அருமையான தொழில் வாய்ப்பு!

English Summary: 100% Subsidized Livestock Schemes - You too can benefit

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.