தமிழ்நாட்டில் பருவ மழைக்காலங்களில் கால்நடைகள் மற்றும் மனிதர்களில் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய நோய்களில் எலிக்காய்ச்சல் முக்கியமானது.
இதனைத் தடுக்க கால்நடை வளர்ப்போர் மழைக்காலங்களில் தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நோய் பரவும் விதம் (Spread of Disease)
பெரும்பாலும் எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட கால் நடைகளின் சிறுநீர் மூலமாகவே எலிக்காய்ச்சல் நோய் ஆரோக்கிய மான விலங்குகள் அல்லது மனிதர்களுக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சிறுநீரில், இக்கிருமிகள் அழியாமல் நீண்ட காலம் காணப்பட, மழையும் மித மான வெப்ப நிலையும் நன்கு உதவி செய்கின்றன.
அறிகுறிகள் (Symptoms)
-
இளங்கன்றுகள்ளில் காய்ச்சல், பசியின்மை, சிறுநீரில் இரத்தம் வெளிப்படுதல், இரத்தச் சோகை மற்றும் மஞ்கள் காமாலை ஆகியவை.
-
கறவை மாடுகளில் பால் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விடுதல் அல்லது முற்றிலும் நின்று விடுதல், மடிநோய், இரத்தம் கலந்த பால் வெளிப்படுதல் மற்றும் சினை மாடுகளில் கருச்சிதைவு போன்றவை காணப்படும்.
-
இதற்கு சிகிச்சை அளிக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் ஓரிரு நாட்களில் இறக்க நேரிடும்.
நோய்த்தடுப்பு முறைகள் (Immunization methods)
-
பண்ணையில் சிறுநீர் மற்றும் சாணம் போன்றவற்றைச் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
-
தூய்மையான குடி நீரையே கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
-
பண்ணையில் நாய்கள் வளர்த்தால் நாய்களுக்குக் எலிக்காய்ச்சல் தடுப்பூசியை வருடத்திற்கு ஒரு முறை போடவேண்டியது கட்டாயம்.
-
கால்நடை வளர்ப்போர் சுகாதாரமான முறையில் கால்நடைகளைக் கையாள வேண்டும்.
-
தேங்கிய நீர்நிலை மற்றும் சேற்று நிலம் ஆகியவற்றைத் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
-
மழைநீரும் கழிவு நீரும் கலந்த நீரில் கால்நடைகளும் மனிதர்களும் நடமாடக் கூடாது.
கூடுதல் விபரங்களுக்கு,
டாக்டர். இரா.உமாராணி
பேராசிரியர்
கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்
திருப்பரங்குன்றம்
மதுரை.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்!
புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!
ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!