கால்நடை வளர்ப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் பசுந்தீவனங்களில் எந்தெந்த சத்து எத்தனை சதவீதம் உள்ளது என்பது தெரிந்துகொள்வது மிக மிக முக்கியமானது.
உதவும் தொழில் (Business to help)
விவசாயிகளுக்கு ஆதரவுத் தொழில் என்று வருணிக்கப்படும் கால்நடைகள் வளர்ப்பு, விவசாயிகள் பயிர்சாகுபடியால் பாதிக்கப்படும் எல்லாக் காலகட்டங்களிலும் தவறாமல் கைகொடுத்துத் தூக்கிவிடும்.
அடர்தீவனங்களின் பங்கு (The role of concentrates)
அத்தகைய கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் அடர்தீவனங்களின் பங்கு இன்றியமையாதது. மாடு, ஆடு ,கோழி வளர்ப்போர்க்கு, அடர்தீவன செலவு என்பதும் தவிர்க்க முடியாதது.
செலவைக் குறைக்கும் (Reduce cost)
சூப்பர்நேப்பியர், வேலிமசால் போன்ற தானியம் மற்றும் பயறுவகை பசுந்தீவனங்கள், கால்நடை வளர்ப்போரின் அடர்தீவன செலவைப் பாதியாக குறைக்கின்றது.
பசுந்தீவனங்களின் சிறப்பு அம்சங்கள்
பல்லாண்டுப் பயிர் (Multi year crop)
பசுந்தீவனங்கள் பல்லாண்டு பயிர் ஆகும். ஒரு முறை நடவு செய்தால் 3-5 வருடங்கள் வரை குறையாமல், தீவனங்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை.
உற்பத்தி அதிகரிக்கும் (Increase productivity)
கால்நடைகளில் பால் கறவை திறனை கூட்டுதல், இளங்கன்றுகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல், முறையான சினைபருவ சுழற்சி , ஆடுகளில் இறைச்சி உற்பத்தி கூடும்.
கச்சா புரத்தின் அளவு:
சூப்பர்நேப்பியர் - 16-18 %
வேலிமசால் - 20-22%
குதிரைமசால் - 18- 22%
சுபாப்புல் -- 22 %
கோஎப்எஸ் 29 - 8.5 %
சூடான் சொர்க்கம் - 6-8%
கால்நடை வளர்ப்போர் அவசியம், பசுந்தீவனங்களை வளர்த்து அடர்தீவன செலவை குறைத்து, அதிக இலாபத்தை ஈட்டுங்கள். பசுந்தீவன விதை மற்றும் கரணைகளை வாங்கிட, இயற்கைவழி ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைகளை அணுகவும்.
தகவல்
அர்வின் ஃபார்ம்ஸ்,
இயற்கைவழி ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை,
போளூர்.
மேலும் படிக்க...
வயல்களில் பதுங்கியுள்ள எலிகள்- தந்திரமாகக் கையாள்வது எப்படி!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று மீண்டும் டிராக்டர் பேரணி!!
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!