Animal Husbandry

Wednesday, 20 January 2021 11:45 AM , by: Elavarse Sivakumar

Credit : Connexion

பருவமழையின் தாக்கம் மிதமான அளவில் காணப்படும்போது கோழிகளில் இறக்கை அழுகல் நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. இது ஒரு நுண்ணுயிரி நோய். இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், கோழிகள் இறக்கும் நிலை உருவாகும்.

நோய் பரவலைத் தடுக்கும் வழிகள் (Ways to prevent the spread of disease)

  • எனவே இந்த நோய் பரவாமல் தடுக்க முதலில் பண்ணைகளை சுகாதாரமாக பண்ணையாளர்கள் பராமரிக்க வேண்டும்.

  • பிறகு கோழிகளுக்கு வழங்கப்படும் நீரில் நச்சு கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.

  • தண்ணீரில் கிருமிகள் இருப்பது தெரியவந்தால், கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும்.

நாட்டு மருந்து (traditional medicine)

எல்லா காலங்களிலும் கோழிகளை நோய் தொற்றிலிருந்து காக்கும் அருமருந்து ஒன்று உள்ளது. இதனை மழை காலம் மற்றும் வெயில் காலம் என அனைத்து காலங்களிலும் கொடுக்கலாம். அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே நாட்டு மருந்து.

தேவையான பொருட்கள் (required things)

  • துளசி இலை

  • தூது வலை இலை

  • கற்பூரவள்ளி இலை

  • முல் முருங்கை இலை

  • பப்பாளி இலை

  • கொய்யா இலை

  • வேப்ப இலை

செய்முறை (Preparation)

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து இலைகளையும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு அதனை நன்கு அரைத்து சிறு உருண்டைகளாக்கி 4 மாத கோழிகளுக்கு (0.75 g) என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

பின்குறிப்பு

எப்பொழுது எந்த மருந்து தேவைப்பட்டாலும் உடனுக்குடன் தயாரித்து பயன் படுத்தவும்.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்!

ஓஹோவென விற்பனையாகும் ஒட்டகப்பால்- லாபம் தரும் சிறந்த தொழில்!

மாட்டுச் சாணத்திற்கு Advance Booking- நம்ப முடிகிறதா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)