ஏழைகள், விவசாயிகள், மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் என அனைத்து வகையான மக்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு ரூ. 6000 வழங்கும் மத்திய அரசின் திட்டத்தைக் குறித்துதான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் எவ்வாறு இந்த ரூ. 6000-ஐ பெறலாம் என்றும், எப்படி பெறுவது? எவ்வாறு, எங்கு விண்ணப்பிப்பது என்பது குறித்தான அனைத்துத் தகவல்களையும் இப்பதிவு விளக்குகிறது.
பிரதான் மந்திரி மாத்ரித்வா வந்தனா யோஜனா (PMMVY திட்டம்)
மத்திய அரசின் இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி மாத்ரித்வா வந்தனா யோஜனா திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஜனவரி 1, 2017 அன்று தொடங்கப்பட்டது. அதன்பிறகு, இந்தத் திட்டத்தின் பலன்கள் நேரடியாகப் பெண்களைச் சென்றடைகின்றன. மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.6000 முழுவதுமாக வழங்கப்படுகிறது. இந்த ரூ. 6000 பணம் நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்பது மேலும் கூடுதல் மகிழ்வைத் தரக் கூடிய செய்தியாக இருக்கின்றது.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!
புதிதாக "கால்நடை மருத்துவர்" செயலி: இனி உடனடி தகவல் பெறுங்கள்
தேவையான ஆவணங்கள்
- புகைப்படம் 2
- பெண்ணின் ஆதார் அட்டை
- வங்கி கணக்கு பாஸ் புத்தகம்
- பெற்றோரின் அடையாள அட்டை
- பெண்ணின் கணவரின் ஆதார் அட்டை
- பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
(குறிப்பு: இவற்றின் நகலையும் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்)
மேலும் படிக்க: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை: இன்றே அப்ளை பண்ணுங்க!
திட்டத்திற்கான தகுதி
இத்திட்டத்திற்குக் கர்ப்பிணிப் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அனைத்து கர்ப்பிணிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். அவர்களின் பிரசவம் அரசு மருத்துவமனையில் நடந்தாலும் சரி, தனியார் மருத்துவமனையில் நடந்தாலும் சரி. கர்ப்பிணிப் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்தத் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: என்னது சமையல் சிலிண்டர் விலை குறைவா? அரசின் முடிவு!
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
ASHA அல்லது ANM மூலம் பிரதான் மந்திரி மாத்ரித்வா வந்தனா யோஜனாவிற்கு விண்ணப்பிக்கலாம். இதனுடன் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் பார்வையிடலாம். இந்த திட்டம் பிரதான் மந்திரி கர்ப்ப உதவித் திட்டம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.
மேலும் படிக்க: இனி முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்: புதிய மாற்றம்!
ரூ. 6000 வரும் முறை
இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளில் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு முதல் தவணையாக 1000 ரூபாயும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும், மூன்றாம் தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதே சமயம், மீதமுள்ள 1000 ரூபாய் குழந்தை பிறக்கும் போது மருத்துவமனையில் கொடுக்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ள பெண்கள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
PMEGP: புதிய தொழில் தொடங்க 17.50 லட்சம் கடன் அரசு அறிவிப்பு!