பெரும்பாலான பெண்கள் தற்காலத்தில் பணியில் இருக்கின்றனர். அதிலும், வீட்டினை விட்டு வெளியில் தங்கி வேலை பார்க்கும் பெண்களாக இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் பெண்களுக்கு குறைந்த செலவில் அரசின் சார்பாக விடுதிகள் அமைக்கப்பட உள்ளதாக் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: புதிய தகவல்: கூட்டுறவு வங்கியின் வாயிலாக ரூ. 1000 உதவித்தொகை!
பணிபுரியும் பெண்களுக்கு என விரைவில் கூடுதலாக தங்கும் விடுதிகள் அரசின் சார்பாகத் திறக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்காக, பெண்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு, வெளியூரக்ளுக்குச் செல்ல வேண்டி இருக்கும் நிலை உள்ளது.
மேலும் படிக்க: அங்காடிகளில் பொருட்களைக் குறைந்த விலையில் விற்க உத்தரவு!
பெண்களுக்கு நம்பகமாகவும், வசதியாகவும் தங்குமிடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசானது பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி திட்டத்தைத் துவக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
இந்த திட்டத்தின் அடிப்படையில், நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் தங்கும் விடுதிக்காகப் புதிய கட்டடங்கள் கட்ட அல்லது தற்போதைய கட்டடங்களை விரிவுப்படுத்த, மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் புதிய விடுதிகள் கட்டுவதற்கான செலவில் 60 சதவீதத்தினை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
பணிபுரியும் மகளிர் விடுதி திட்டத்தின் பெயரானது “ஷக்தி நிவாஸ்” என மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தங்கியிருக்கும் பெண்கள் தங்களது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கூடவே வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
மொத்தமாக 872 விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதில், 497 விடுதிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விடுதிகள் விரைவில் திறக்கப்பட உள்ளது எனவும், இந்த ஷக்தி நிவாஸில் பெண்கள் வாடகை கொடுத்துத் தங்கலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?